சகுந்தலா அம்மாள் பொறியியற் கல்லூரி

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சகுந்தலா அம்மாள் பொறியியல் கல்லூரி (S. A. Engineering college) சென்னையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய தர ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. முதன்மையான பாடப் பிரிவுகளில் பொறியியல் படிப்புகள் வழங்குகிறது. இது எஸ். ஏ. பொறியியற் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

அமைவிடம்

இது பூந்தமல்லி - ஆவடி சாலையில், திருவேற்காட்டில் உள்ளது. 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் ஆறு கட்டிடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நான்கு தளங்ளைக் கொண்டவை, முதன்மை கட்டிடத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பறைகளும், நிர்வாக அலுவலகமும் உள்ளன. கணிப்பொறித் துறை கட்டிடத்தில், கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கான ஆய்வகங்களும், வகுப்பறைகளும் உள்ளன. இயந்திரப் பொறியியல் துறையில் கட்டிடப் பொறியியல், இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கான பட்டறைகளும், வகுப்பறைகளும் உள்ளன. மின்துறைக் கட்டிடத்தில் மின்னியல், மின்னணுவியல் மாணவர்களுக்கான வகுப்பறைகளும், ஆய்வகங்களும் உள்ளன. முதுநிலை மாணவர்களுக்கான கட்டிடத்தில், வகுப்பறைகளும், கருத்தரங்கக் கூடம், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியனவும் உள்ளன. ஒவ்வொரு துறைக் கட்டிடத்திலும், முதலாவது தளத்தில் துறைத் தலைவர் அறை உள்ளது.

Remove ads

நிர்வாகம்

தர்ம நாயுடு அறக்கட்டளையினர் மேற்பார்வையில் கல்லூரி நிர்வாகம் செயலாற்றுகிறது. இது தெலுங்கு சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் ஆகும். ஆவடி எம். எல். ஏ சுதர்சனம் நாயுடுவின் தந்தையின் பெயரில் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. சுதர்சனத்தின் தாயின் பெயர் கல்லூரிக்கு சூட்டப்பட்டது.

நூலகம்

கல்லூரியின் மைய நூலகத்தில் 50,000 நூல்கள் உள்ளன. கணினியியல், மின்னியல், மின்னணுவியல், இயந்திரப் பொறியியல், கட்டிடக் கலை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சார்ந்த நூல்களும், குறிப்புதவிப் புத்தகங்களும் இதில் அடங்கும். ஐ. ஈ. ஈ. ஈ நிறுவனத்தின் ஆய்வு இதழ்களும், தேசிய, மாநில அளவிலான ஆய்விதழ்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் செய்திகளை அறிய தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாள நாளேடுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இணைய வழியில் தகவல்களைப் பெற இணைய இணைப்புடன் கூடிய கணினிகளும் உள்ளன.

பிற வசதிகள்

  • விளையாட்டுகள்:

கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், டென்னிசு ஆகிய விளையாட்டுகளுக்கென தனித் தனித் திடல்கள் உள்ளன.

  • கருத்தரங்கக் கூடம்:

இருநூறு பேர் வரை அமரும் வசதி கொண்ட இரு கருத்தரங்கக் கூடங்கள் உள்ளன.

  • உணவகம்:

ஒரே நேரத்தில், நானூறு பேர் வரை உண்ணும் அளவிலான உணவகம் உள்ளது. சிறு அடுமனையும் இணைக்கப்பட்டுள்ளது.

  • விடுதி:

ஆண்கள், பெண்களுக்கான தனி விடுதிகள் உள்ளன. இவற்றில் நூறு பேர் தங்கலாம்.

  • பேருந்துகள்:

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வர 25 கல்லூரிப் பேருந்துகள் உள்ளன.

Remove ads

துறைகள்

இளநிலை:
  • கணிப்பொறியியல்
  • மின்னியல், தொலைத்தொடர்பியல்
  • மின்னணுவியல்
  • இயந்திரப் பொறியியல்
  • கட்டிடக் கலை
  • தகவல் தொழில்நுட்பம்
முதுநிலை:
  • வணிக நிர்வாகம்
  • கணினிப் பயன்பாடுகள்
  • கணிப்பொறியியல்
  • கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ்
  • எம்பெடட் சிஸ்டம்ஸ்

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads