சந்திரகுப்த சாணக்யா

1940 இல் வெளியான தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சந்திரகுப்த சாணக்யா
Remove ads

சந்திரகுப்த சாணக்யா (Chandraguptha Chanakya) என்பது ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சி. கே. சச்சி (சி. கே. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1][2]

விரைவான உண்மைகள் சந்திரகுப்த சாணக்யா, இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

மௌரிய பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவரது ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அர்த்தசாஸ்திரம் என்னும் அரசியல் நூலை எழுதிய கௌடில்யர் தான் சாணக்கியர் என பாரம்பரியமாக சொல்லப்படுகிறது. இவர்களின் வரலாறே இந்தத் திரைப்படமாகும் [1]

நடிகர்கள்

இதில் இடம்பெற்ற நடிகர்களின் பட்டியில் தி இந்து இதழில் இருந்து எடுக்கபட்டன.[1]

தயாரிப்பு

இப்படத்தை கோயமுத்தூரைச் சேர்ந்த சி. கே. சச்சி இயக்கினார். எழுத்தாளர் கே. ஆர். நாராயணனின் உறவினர் இவராவார். அக்காலத்தில் பிரபல கருநாடக இசைப்பாடகியாக இருந்த என். சி. வசந்தகோகிலம் நடித்த முதல் படமாகும். இது ஒரு வரலாற்றுப் படம் என்பதால் படத்துக்கான ஒப்பணை சாதனங்கள், நகைகள் போன்றவை இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்டன. இப்படத்திற்கு எஸ். எஸ். தாஸ் ஒளிப்பதிவை மேற்கொண்டார். அக்காலக்கடத்தில் சில படங்களுக்கு இரண்டு பெயர்கள் வைக்கும் வழக்கம் இருந்தது. அதைப் போல இப்படத்திற்கு சந்திரகுப்த சாணக்யா (அல்லது) தறுதலை தங்கவேலு என்ற தலைப்பு இடப்பட்டது.

பாடல்கள்

திரைப்படத்துக்கு பாபநாசம் சிவன் இசையமைத்தார். தங்களுக்கான பாடல்களை இளவரசி சாயா பாத்திரத்தில் நடித்த என். சி. வசந்தகோகிலமும், சந்திரகுப்தரான நடித்த பவானி கே. சாம்பமூர்த்தியும் பாடினார்.[1]

வெளியீடு

இப்படம் 1940 ஆகத்து 24 அன்று வெளியானது. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads