சந்திரஹாசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரஹாசம் என்பது தமிழ் மன்னர்களான பாண்டியர்களின் குலவாளாகவும், இந்து தொன்மவியலில் சிவபெருமானின் வாளாக சந்திரஹாசம் கருதப்படுகிறது.[1]
பாண்டியர்களின் குலவாள்
பாண்டியர்கள் தங்கள் குலத்து அரச வாளான சந்திரஹாசத்தினை தலைமுறை தலைமுறையாக தங்கள் உயிரினும் மேலாக காத்து வந்தனர் என்றும் சந்திரஹாசம் என்கிற மீன்கள் துள்ளும், அந்த வாளியினை வைத்திருப்பவன் மட்டுமே பாண்டிய நாட்டின் மன்னனாக மக்களால் ஏற்கப்படுவான் என்பது மதுராவிஜயம் என்கிற சமஸ்கிருத நூலில் ராணி கங்கா தேவி குறிப்பிடுகிறார்.
அரசவாளாக பாண்டியர்களால் கொண்டாடப் பட்டதால், இந்த வாளுக்கு நெடிய வரலாறு உள்ளது.[2]
சந்திரஹாசம் அல்லது வாளோர் குலம் என அழைக்கப்பட்ட குலத்தினர் இந்த சந்திரஹார வாளினை பாதுகாத்து வந்தார்கள் என்றும் தற்போதும் வாளினை பாதுகாத்து வருகிறார்கள் என்றொரு நம்பிக்கை உள்ளது.
Remove ads
சொல்லிலக்கணம்
சோழர்கள் தங்களை சூரியகுலம் என்று அழைத்துகொள்வார்கள். பாண்டியர்கள் தங்களை சந்திர குலம் என்று அழைத்துக்கொள்வார்கள், அதனால் பாண்டியர்களின் குலவாள் சந்திரஹாசம் என்கிற பெயருடன் திகழ்ந்தது என்றும் கங்காதேவி தனது மதுராவிஜயம் நூலில் கூறுகிறார்.
இந்து இதிகாசத்தில்
இந்து சமய இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியற்றில் இந்த சந்திரஹாசம் வாளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இராமாயணம் சிவபெருமானின் வாளின் பெயர் சந்திரஹாசம் என்கிறது. இராவணனின் தவத்தினால் சிவபெருமானினடமிருந்து சந்திரஹாச வாளைப் பெறுகிறான். சீதையை கவர்ந்து செல்கையில் அவனை தடுக்கும் ஜடாயுவை இந்த வாளால் வெட்டுகிறான்.[1] தவறான செயலுக்கு தன்னைப் பயன்படுத்தியதால், இராவணனை விட்டு சிவபெருமானிடம் சந்திரஹாசம் வந்து, பாவம் போக்கியது.[3]
சந்திரஹாசம் என்கிற பெயர் வியாசர் எழுதிய மகாபாரதத்தில் ஹஸ்தினாபுர அரண்மனையின் பெயராக குறிப்பிடப்படுகிறது.
புதினத்தில்
சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்கிற 2011ஆம் ஆண்டு சிறந்த புதினத்திற்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினத்தில் சந்திரஹாசம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்த சந்திரஹாசம் வாளிற்காக பாண்டிய குலத்திரையிடையை நிகழும் போராட்டத்தினை விகடன் பிரசுரம் சித்திக்கதை புதினமாக வெளியிட்டது.[4]
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads