சமாரியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமாரியம்(III) நைட்ரேட்டு (Samarium(III) nitrate) என்பது Sm(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மயான நிறத்தில் நெடியற்று ஓர் அறுநீரேற்றாக இவ்வுப்பு உருவாகிறது. 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து நீரிலி நிலையை அடைகிறது. 78 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்குகிறது.[1] தொடர்ந்து 420 பாகை செல்சியசு வரை சூடேற்றினால் ஆக்சிநைட்ரேட்டாக மாற்றமடைகிறது. 680 பாகை செல்சியசு வெப்பநிலையை அடையும்போது சமாரியம்(III) ஆக்சைடாக சிதைவடைகிறது.[2]
Remove ads
பயன்கள்
சமாரியம்(III) நைட்ரேட்டு என்பது ஓர் இலூயிசு அமில வினையூக்கி ஆகும். நைட்ரேட்டு முன்னோடி கரைசலை உருவாக்க பயன்படுகிறது. திட ஆக்சைடு மறு உற்பத்தி எரிபொருள் கலங்களில் சமாரியம்(III) நைட்ரேட்டு மீவினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது. சமாரியம்(III) நைட்ரேட்டுடன் அறுநீரேற்று, இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு, கோபால்ட்(II) நைட்ரேட்டு அறுநீரேற்று ஆகியவற்றைக் கலந்து மீவினையூக்கி தயாரிக்கப்படுகிறது.[3]
சமாரியம்(III) நைட்ரேட்டு சமாரியம் கலந்த சீரியா தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் கலங்களுக்கான மின்பகுளிகள் தயாரிப்பதில் சமாரியக் கலப்பு சீரியா பயன்படுத்தப்படுகிறது. 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் சீரியம்(III) நைட்ரேட்டுடன் சமாரியம்(III) நைட்ரேட்டை ஒன்றாகக் கலந்து மூவெத்திலீன் கிளைக்கால் கரைப்பானில் கரைத்து 5 மணி நேர வினைக்குப் பின் சமாரியக் கலப்பு சீரியா தயாரிக்கப்படுகிறது. 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் நான்கு மணி நேரத்திற்கு உலர்த்தி பின்னர் இதை மீண்டும் இரண்டு மணி நேரத்திற்கு 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் சமாரியக் கலப்பு சீரியா கிடைக்கிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads