சரசாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறிமுகம்
சரசாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் கப்பூது கிராமமும், கிழக்கில் மீசாலை, மந்துவில் என்பனவும், தெற்கில் மட்டுவில் கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த வாதரவத்தையும் உள்ளன.[1] இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்கியுள்ளது.யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கு வடக்கே சாவகச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருகு பருத்தித்துறை நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம்.
Remove ads
வரலாறு
சரசாலை எனும் பெயர் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டு உருவான ஒரு காரணப்பெயராகும். இராமாயண யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்திருந்த இராமபிரனானும் அவரது சேனைகளும் இவ் ஊரிலே போருக்காக பயன்படுத்தப்பட்ட அம்புகளை தயாரித்தார்கள். அம்பு என்பதை சரசு எனவும் அழைக்கலாம். எனவே அம்புகளை உற்பத்தி செய்யும் இடமாக இருந்தமையால் இது சரசு ஆலை என அழைக்கப்பட்டு பின்னர் சரசாலை என அழைக்கப்படுகின்றது.
சிறப்புகள்
சரசாலை கிராமம் கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து புத்தூர் வீதியின் வலது புறமாகவும் பருத்தித்துறை வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு ஐந்து சந்தி என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கில் பறவைகள் சரணாலயம் காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைகள்
- சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்
- ஸ்ரீகணேசா வித்தியாலயம்
கோவில்கள்
- நுணுவில் பிள்ளையார் கோவில்
- வீரமாகாளி அம்மன் கோவில்
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads