சரவாக் சுல்தானகம்
சரவாக் மாநிலத்தில் ஓர் உள்நாட்டு அரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரவாக் சுல்தானகம், (ஆங்கிலம்: The Sultanate of Sarawak; மலாய்: Kesultanan Sarawak; ஜாவி: كسلطانن ملايو سراوق دارالهنا) என்பது சரவாக் மாநிலத்தில்; இப்போதைய கூச்சிங் பிரிவில் மையம் கொண்டு மையம் கொண்டு ஆட்சி செய்த ஓர் உள்நாட்டு அரசு. 1599–ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த அரசு.
இந்தச் சுல்தானகம் உருவாவதற்கு முன்னர், சாந்துபோங் இராச்சியம் (Santubong Kingdom) எனும் ஓர் இராச்சியம் இருந்தது. இதன் தலைநகரம் விஜயபுரம் (Vijayapura). சாந்துபோங் இராச்சியம் 500-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இந்த சாந்துபோங் இராச்சியத்தை ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு ஆகியவை ஆட்சி செய்து இருக்கின்றன. [1]
இந்தச் சாந்துபோங் இராச்சியத்தை ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு ஆகியவை ஆட்சி செய்து இருக்கின்றன. 15-ஆம் நூற்றாண்டு வரை சாந்துபோங் இராச்சியம் ஆட்சியில் இருந்தது. திடீரென வரலாற்றில் இருந்து சாந்துபோங் இராச்சியம் மறைந்து போனது. அதன் பின்னர் தஞ்சோங்புரம் இராச்சியம் (Tanjungpura Kingdom) உருவானது.
Remove ads
பொது
புரூணை சுல்தானகத்தின் படையெடுப்பிற்குப் பிறகு 1599–ஆம் ஆண்டில் இந்த சரவாக் சுல்தானகம் நிறுவப்பட்டது. 1599–ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் மட்டுமே சரவாக் சுல்தானகம் ஆட்சியில் இருந்தது.[2]
இந்தச் சுல்தானகத்தின் முதலும் கடைசியுமான சுல்தான், இப்ராகிம் அலி உமர் ஷா இப்னி சுல்தான் முகம்மது அசன் (Ibrahim Ali Omar Shah Ibni Sultan Muhammad Hassa). இவர் புருணையின் சுல்தான் தெங்கா எனும் இளவரசர் ஆகும்.[3]
Remove ads
சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி
அப்போதைய புரூணை, ஜொகூர் அரசுகளுடன் சரவாக் சுல்தானகம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. தவிர மேற்கு போர்னியோவில் இருந்த சம்பாஸ் (Sambas), சுகடனா (Sukadana) மற்றும் தஞ்சோங்புரா - மாத்தான் (Tanjungpura-Matan) உள்ளிட்ட மலாய் இராச்சியங்களில் வம்சாவழி ஆட்சிமுறைகள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தது.[4]
1641-ஆம் ஆண்டில் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி உமர் ஷா இப்னி சுல்தான் முகம்மது அசன் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரவாக் சுல்தானகம் கலைக்கப்பட்டது. பின்னர் புருணை சுல்தானகத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூர் மலாய் ஆளுநர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.
Remove ads
வரலாறு
புரூணை நாட்டு அரசர்களின் கால வரலாற்றுச் சுவடு சலாசிலா ராஜா - ராஜா புரூணை (Salahsilah Raja-Raja Brunei). அந்த வரலாற்றுச் சுவடுகளின் பதிவுகளின் படி; 1582 - 1598-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புரூணை பேரரசை ஆட்சி செய்த மன்னர் சுல்தான் முகமது அசன் (Sultan Muhammad Hassan); அவர் மறைவுக்குப் பிறகு சரவாக் சுல்தானகம் நிறுவப்பட்டது.
சுல்தான் முகமது அசனின் மூத்த மகன் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி உமர் ஷா (Ibrahim Ali Omar Shah Ibni Sultan Muhammad Hassa). இருப்பினும், இளைய மகன் அப்துல் ஜலீல் (Abdul Jalilul Akbar) முடிசூடிக் கொண்டார்.
இதைச் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி எதிர்த்தார். மூத்த இளவரசரான தனக்குத் தான் சுல்தானாகும் முன்னுரிமை இருப்பதாக நம்பினார்.[5]
சாந்துபோங் கோட்டை அரண்மனை
புதிதாக அரியணை ஏறிய தம்பி அப்துல் ஜலீல், புருணை இராச்சியத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள எல்லைப் பிரதேசமான சரவாக்கில் தன் அண்ணன் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலியை சுல்தானாக நியமித்தார்.
கூச்சிங்கிற்கு வந்த சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி, சாந்துபோங்கில் ஒரு கோட்டை அரண்மனையை கட்டினார். அந்த பகுதியை சரவாக் சுல்தானகத்தின் அரச, நீதித்துறை நிர்வாக தலைநகராக மாற்றினார். தன்னை சரவாக் சுல்தானகத்தின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். இப்படித்தான் சரவாக் சுல்தானகம் உருவானது.[6]
1641-ஆம் ஆண்டில், சுல்தான் தெங்கா இப்ராகிம் அலியும்; அவரின் அரசக் குடும்பத்தினரும் சரவாக், சாந்துபோங், பத்து புவாயா எனும் இடத்தில் தங்கி இருந்தார்கள். அப்போது, சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி, அவருடைய மெய்க்காப்பாளர் ஒருவரால் கொலை செய்யப் பட்டார். அவரின் இறப்பிற்குப் பின்னர் சரவாக் சுல்தானகம் கலைக்கப் பட்டது.[6][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads