சா. கணேசன் (அரசியல்வாதி)
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சா. கணேசன் (S. A. Ganesan பிறப்பு: 21 செப்டம்பர் 1930 - 12 ஏப்ரல் 2018) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1970 முதல் 1971 வரை சென்னை மாநகராட்சியின் நகரத்தந்தையாக சேவை செய்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியைச் சேர்ந்தவர்.[1]
Remove ads
வாழ்க்கை
சா. கணேசன் துவக்கத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போது தி. நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970 முதல் 1971 வரை சென்னை மேயராக இருந்தார். 1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads