சாமுண்டீஸ்வரி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமுண்டி கோயில் (Chamundeshwari Temple) (ಶ್ರೀ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನ) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும்.
Remove ads
மகாசக்தி பீடங்கள்
சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும்.
வரலாறு

சாமுண்டிக் கோயில் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, பொ.ஊ. 1659-இல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது.[2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது. இச்சிற்பம் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
Remove ads
படக்காட்சிகள்
- சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயில்
- முன்னோக்குப் பார்வை
- முதன்மை நுழைவு வாயில்
- இலக்குமி நாராயணன் கோயில்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads