சாய்ரா வசீம்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாய்ரா வசீம் (Zaira Wasim) (பிறப்பு அக்டோபர் 23, 2000) [1] இந்தித் திரைப்படங்களில் பணியாற்றும் ஓர் இந்திய நடிகை ஆவார். பிலிம்பேர் விருது மற்றும் தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். 2017 ஆம் ஆண்டில் புது தில்லி விழாவில் இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் குழந்தைகளுக்கான தேசிய வீரதீர விருதைப் பெற்றார்.[2]
இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த பிறகு, சாய்ரா, விளையாட்டு வாழ்க்கை வரலாற்று படமான தங்கல் (2016) திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இது இந்திய விளையாட்டு வீரரான கீதா ஃபோகட் என்ற பாத்திரத்தை சித்தரித்தது. அதன் பிறகு சீக்ரட் சூப்பர்ஸ்டார் (2017) என்ற படத்தில் பாடகராக முயற்சிக்கும் பெண்ணாக நடித்தார், இவ்விரு படங்களும் மிக அதிக அளவில் வசூலித்த இந்திய படங்களாக உள்ளது. இவ்விரண்டு படங்களிலும் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது மற்றும் பிலிம் ஃபேர் விருது கிடைத்தது.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
சாய்ரா வாஸிம் இந்தியாவின் காஷ்மீரில் ஜஹித் மற்றும் சர்கா வாசிம் ஆகியோருக்குப் பிறந்தார். அவரது தந்தை ஸ்ரீநகரில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது தாயார் ஆசிரியர் ஆவார். ஸ்ரீநகரில் உள்ள செயின்ட் பால் சர்வதேச கழகத்தில் பத்தாம் வகுப்பை சாய்ரா நிறைவு செய்தார்.[3][4]
தொழில்
இந்தித் திரைப்படங்களுக்கு முன்னதாக, இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்களில் சாய்ரா நடித்துள்ளார்.[5] தற்பொழுது "தி ஸ்கை இஸ் பிங்க்" என்னும் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் ஃபர்ஹான் அக்தர் உடன் நடித்து வருகிறார்.[6]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
