சி. சே. மார்ட்டின்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிரிலஸ் சேவியர் மார்ட்டின் (Cyrillus Xavier Martyn, பிறப்பு: 14 மார்ச் 1908)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் சி. எக்ஸ். மார்ட்டின்C. X. Martynநாஉ, இலங்கை நாடாளுமன்றம் யாழ்ப்பாணம் ...

மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார்.[2] அதன் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5]

மார்ட்டின் 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] மார்ட்டின் உரோமன் கத்தோலிக்க மதத்தவர் ஆவார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads