சிங்கப்பூர் தபால்தலை அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

சிங்கப்பூர் தபால்தலை அருங்காட்சியகம்map
Remove ads

சிங்கப்பூர் தபால்தலை அருங்காட்சியகம் (Singapore Philatelic Museum; சீனம்: 新加坡集邮博物馆) சிங்கப்பூரின் அஞ்சல் வரலாறு மற்றும் அதன் முத்திரைகள் பற்றிய காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகமாகும்.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

பின்னணி

சிங்கப்பூரில் 23-பி கோல்மன் தெருவில்[1] அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், முன்பு ஆங்கிலோ-சீனப் பள்ளியின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த அருங்காட்சியக கட்டிடம் 1906-ல் கட்டி முடிக்கப்பட்டது. 1970களில், கட்டிடம் மெதடிஸ்ட் புத்தக அறையாக மாறியது. இது தற்போதைய அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தற்போது புனரமைப்புக்காக மூடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தபால்தலை அருங்காட்சியகம் 19 ஆகத்து 1995 அன்று சிங்கப்பூரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பற்றிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் திறக்கப்பட்டது. நிரந்தர காட்சியகங்கள் தவிர, கருப்பொருளை மையப்படுத்தி காட்சி மாடங்களும் ஆண்டு முழுவதும் மாறிவரும் கண்காட்சிகளை வழங்குகின்றன. புகழ்பெற்ற தபால்தலையாவார்களின் தனிப்பட்ட சேகரிப்புகளின் காட்சிகள், வெளிநாட்டிலிருந்து வரும் பயணக் கண்காட்சிகள் மற்றும் புதிய முத்திரை வெளியீடுகளை நினைவுபடுத்தும் கருப்பொருள் கண்காட்சிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த அருங்காட்சியகத்தில் தபால் முத்திரைக் கடை உள்ளது. மேலும் இது தபால் தலைச் சேகரிப்பாளர்களிடையே பிரபலமானது.

சிங்கப்பூர் குடியரசினால் வெளியிடப்பட்ட முத்திரைகள் அனைத்தையும் பார்வையாளர்கள் ஆய்வு செய்யக்கூடிய கோப்புகள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது அச்சிடப்பட்ட பிரித்தானியத் தபால்தலையின் செருமனியப் போலி பதிப்பான ஆறாம் ஜோர்ஐ கேலி செய்யும் அச்சி பிழையுடன் கூடியதும் காட்சியில் உள்ளது.

Thumb
மேசோனிக் கிளப்

சிங்கப்பூர் தபால்தலை அருங்காட்சியகத்திற்கு அருகில் சமீபத்தில் மீட்டெடுக்கப்பட்ட மேசோனிக் குழுமம் உள்ளது.

6 மார்ச் 2020 அன்று, இது 2021-ல் மீண்டும் திறக்கப்படும் போது பிரத்தியேக குழந்தைகள் அருங்காட்சியகமாக மாறும் என அறிவிக்கப்பட்டது.[2] 7 திசம்பர் 2021 அன்று, கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, மீண்டும் திறப்பது திசம்பர் 2022க்கு தள்ளி வைக்கப்பட்டது.[3]

Remove ads

மேலும் பார்க்கவும்

இலக்கியம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads