சின்னக்கண்ணம்மா

ஆர். ரகு இயக்கிய 1993 ஆண்டைத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சின்னக்கண்ணம்மா
Remove ads

சின்ன கண்ணம்மா (chinna kannamma) 1993 இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். ஆர். ரகு இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் கார்த்திக் முத்துராமன், கௌதமி, சுஹாசினி, நாசர், பேபி சார்மிலி ஆகியோர் நடித்துள்ளனர். அரு. சண்முகநாதன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் சனவரி 29, 1993 இல் வெளியிடப்பட்டுள்ளது [1][2][3] . மேலும் இத்திரைப்படம் தெலுங்கிலும் "ஊயாலா" எனும் பெயரில் மேகா ஸ்ரீகாந்த், ரம்யா கிருஷ்ணன் இவர்களுடன் நாசர், சுஹாசினி நடிப்பில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[4]

விரைவான உண்மைகள் சின்ன கண்ணம்மா, இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

அரவிந்த் ஓர் இளைஞன் அவன் பணிஇடமாற்றம் சென்ற இடத்தில் காயத்திரி எனும் பெண்ணுடன் காதல் கொள்கிறான். இருப்பினும் இவர்களின் குடும்பம் திருமணத்திற்கு எதிர்ப்பு காட்டியது. இருப்பினும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து விரைவிலேயே காயத்திரி கற்பமடைந்து விடுகிறாள். பிரசவத்தினன் சில நாட்களுக்கு பின் காயத்திரி ஒரு இளம்பெண்ணுடன் நீண்ட உரையாடலை நிகழ்த்துகின்றாள். இவளைப்போல் உமாவும் மகப்பேற்றிற்காக காத்து நிற்பவளாவாள். பிரசவத்தின் அன்றிரவு காயத்திரி மற்றும் உமா இருவரும் இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

மருத்துவ மனையில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து காரணமாக குழந்தைகள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றுவதோடு திரும்ப குழந்தைகளை பெற்றோரிடம் கொடுக்கும் போது காயத்திரிக்கும் உமாவிற்கும் பிள்ளைகளை மாறி கொடுத்து வாடுகிறாள் ஓர் இளம் தாதி. அத் தாதி அச் சம்பவம் தொடர்பில் தனது மூத்த ஊழியரிடம் தெரிவிக்க அவளோ அது பெரிய பிரச்சினையில் முடியும் என அஞ்சி அவ் விடயத்தை பெற்றாரிடம் தெரிவிக்க மறுத்தனர்.

இரு வருடங்களுக்கு பிறகு காயத்திரி, அரவிந்த் மற்றும் அவர்களின் மகள் சரண்யாவின் வாழ்வு சந்தோசத்தில் போக சில காலங்களுக்கு பிறகு காயத்திரி இறந்து போக அரவிந்த் சரண்யா ஆகியோர் ஊட்டிக்கு இடம்மாறிச்செல்கின்றனர். அங்கு உமா தம்பதியினருடன் நட்பு கொள்கின்றனர். உமாவின் மகள் இதய வருத்தத்தின் காரணமாக இறந்து போக உமா சரண்யாவை தத்துதெடுக்க அரவிந்த்திடம் கோரிய போது அதற்கு அரவிந்த் மறுக்கிறான். சில காலங்களுக்கு பின்னர் அவ் இளம் யுவதி அவர்களின் பிள்ளைகள் பற்றிய இரகசியங்களை உமாவிடம் தெருவிக்க உமா நீதிமன்றத்தின் உதவியுடன் தனது பிள்ளையை திரும்ப அரவிந்த்திடம் இருந்து திரும்பி பெறுகிறாள். இருப்பினும் சரண்யாவை அரவிந்த்திடம் மீளச்சேர்ப்பது மீதிக்கதையாகின்றது.

Remove ads

நடிகர்கள்

  • கார்த்திக் முத்துராமன் - அரவிந்த்
  • கௌதமி - காயத்திரி
  • சுஹாசினி - உமா
  • பாக்கியலட்சுமி (பாக்கியஸ்ரீ) - தாதி பத்மா
  • நாசர் - பிரதீப்
  • பேபி சார்மிலி - சரண்யா
  • வி. கே. ராமசாமி - ராமநாதன்
  • சார்லி - பிச்சாண்டி
  • வடிவுக்கரசி - நீதிபதி
  • எல். ஐ. சி. நரசிம்மன் - வைத்தியர்
  • கமலா கமேஷ் - காயத்திரியின் தாய்
  • பேபி பூஜா - பிரியா
  • மாஸ்டர் சிவா - தருண்
  • பேபி திவ்யா

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை 1993 இல் வெளியிடப்பட்டது. பாடல் வரிகளை வாலி, பஞ்சு அருணாசலம், பிறைசூடன், சண்முகா பஞ்சு ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]

மேலதிகத் தகவல்கள் வ. எண், பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads