சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை
மலேசியா, சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள பன்னாட்டு சுற்றுகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை (ஆங்கிலம்: Sepang International Circuit; அல்லது Petronas Sepang International Circuit; மலாய்: Litar Antarabangsa Sepang) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள பன்னாட்டு சுற்றுகை ஆகும்.
இந்தச் சுற்றுகை கோலாலம்பூருக்கு தெற்கே ஏறக்குறைய 45-கிலோமீட்டர் (28 மைல்) தொலைவிலும்; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகாமையிலும் அமைந்துள்ளது.[1]
Remove ads
பொது
1999-ஆம் ஆண்டில் இருந்து 2017-ஆம் ஆண்டு வரையில் பார்முலா 1 (Formula One) மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை (Malaysian Grand Prix) நடத்தியது.
மலேசிய விசையுந்து கிராண்ட் பிரிக்ஸ் (Malaysian Motorcycle Grand Prix), மலேசியா மெர்டேகா தாங்குதிறன் போட்டி (Malaysia Merdeka Endurance Race); மற்றும் பிற முக்கிய விசையுந்து நிகழ்வுகளுக்கான இடமாகவும் செயல்பட்டு உள்ளது.
வரலாறு
முன்பு சிப்பாங் எப் 1 சுற்றுகை (Sepang F1 Circuit) என்று அழைக்கப்பட்டது; பின்னர் 31 அக்டோபர் 2023 அன்று, சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை என மறுபெயரிடப்பட்டது. இந்தச் சுற்றுகை ஜெர்மன் வடிவமைப்பாளர் எர்மன் தில்கே என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
1990-களில் பிரதமர் மகாதீர் முகமது அரசாங்கத்தின் கீழ், புத்ராஜெயாவிற்கு அருகில், 1997 - 1999-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை கட்டப்பட்டது. 1999-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி மலேசியாவின் 4-ஆவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் இந்தச் சுற்றுகை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[2]
Remove ads
தளவமைப்பு
இந்தச் சுற்றுகையின் முதன்மைச் சுற்று, பொதுவாக கடிகார திசையில் ஓடுகிறது. இந்தச் சுற்றுகை 5.543 கிமீ (3.444 மைல்) நீளம் கொண்டது.[3]
மேலும் காண்க
காட்சியகம்
சுற்றுகை கட்டமைப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads