சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்

From Wikipedia, the free encyclopedia

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்
Remove ads

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology), முன்பு ஸ்ரீசித்திர திருநாள் மருத்துவ மையம் என்று அழைக்கப்பட்டது. இது 1976ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்ட இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

வரலாறு

1973 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரின் கடைசி மகாராஜாவான சித்திர திருநாள் பலராம வர்மா, பல மாடி கட்டிடத்தை கேரள அரசிற்குப் பரிசாக வழங்கினார். 1976ஆம் ஆண்டில் திட்டக் குழுவின் துணைத் தலைவரான பி. என். ஹக்ஸர், ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ மையத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, சுமார் 11 கிமீ (6.8 மைல்) தொலைவில் உள்ள பூஜாபுராவில் உள்ள சேட்டல்மண்ட் அரண்மனையில் ஒரு உயிரிய மருத்துவ தொழில்நுட்பப் பிரிவு நிறுவப்பட்டது. இது பலராம வர்மாவின் அத்தை சேது லட்சுமி பேயியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.[1][2] இந்த நிறுவனம் 1980ஆம் ஆண்டில் நாடாளுமன்றச் சட்டத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது, மேலும் அதன் தற்போதைய பெயருக்கு மறுபெயரிடப்பட்டது.[3] நிறுவனத்தின் மூன்றாவது பிரிவான சுகாதார அறிவியல் ஆய்வுகளுக்கான அச்சுதா மேனன் மையம் (AMCHSS) 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சய் பிஹாரி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் எம். எஸ். வலியாதன் (1979-1994), கே. மோகன்தாஸ் (1994-2009), கே ராதாகிருஷ்ணன் (2009-2013) மற்றும் டாக்டர் ஆஷா கிஷோர்(2015-2020) ஆவர்.[4] திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் சின்னமான சங்கத்தை (ஸ்ரீ பத்மநாபசாமியின் சின்னம்) இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் கௌரவிக்கிறது.

சுகாதார அறிவியல் ஆய்வுகளுக்கான அச்சுத மேனன் மையம்

கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் செ. அச்சுத மேனனின் பெயரால் பெயரிடப்பட்ட ஏஎம்சிஎச்எஸ்எஸ் 1990 களில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும், சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க ஆராய்ச்சியாளர்களுக்கு கல்வி கற்பதற்கும் உருவாக்கப்பட்டது. இம்மையமானது நிறுவனத்தின் கல்வி பிரிவாகும், மேலும், சுகாதாரம் தொடர்பான பல்வேறு துறைகளுக்கான ஆராய்ச்சிகளை நடத்துகிறது. இந்த மையம் சுகாதார அறிவியலில் எம். பி. எச், டி. பி. ஹெச் மற்றும் பி. எச். டி படிப்புகளை வழங்குகிறது.

உயிரியல் மருத்துவ தொழில்நுட்பப் பிரிவு

உயிர்மருத்துவ தொழில்நுட்பப் பிரிவு, பல்வேறு மருத்துவப் பொருட்களுக்கான தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக உருவாக்கி மாற்றியமைப்பதன் மூலம் இந்தியாவில் மருத்துவ சாதனத் தொழிற்துறை தளத்தை நிறுவுவதில் முன்னோடிப் பங்காற்றியுள்ளது. இதில், இயந்திர இதய வால்வு செயற்கை உறுப்பு, இரத்த ஆக்ஸிஜனேற்றிகள், கண் மருத்துவப் பஞ்சு, மையச் சுற்று ஊசி மின்முனை, ஹைட்ராக்ஸியபடைட் அடிப்படையிலான உயிர்மட்பாண்ட நுண்துளைத் துகள்கள் போன்றவை அடங்கும், மேலும் பல முயற்சிகள் தொழில்துறை ஒத்துழைப்புடன் செயல்பாட்டில் உள்ளன. தற்போது டி.டி.கே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் செயற்கை இதய வால்வை உருவாக்கிய இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads