சுவாபி மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சுவாபி மாவட்டம்
Remove ads

சுவாபி மாவட்டம் (Swabi District) (பஷ்தூ: سوابۍ ولسوالۍ, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சிந்து ஆறு மற்றும் காபுல் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இம்மாவட்டம் 4 தாலுகாக்கள் கொண்டது. இம்மாவட்டத்தின் 96.4% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.

விரைவான உண்மைகள் சுவாபி மாவட்டம் صوابی, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுவாபி மாவட்ட மக்கள் தொகை 16,25,477 ஆகும். அதில் ஆண்கள் 8,15,828 மற்றும் பெண்கள் 8,09,550 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 83.02% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 59.06% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 96.97% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1086 பேர் உள்ளனர்.[1]

மாவட்ட நிர்வாகம்

சுவாபி மாவட்டம் 4 தாலுகாக்கள் கொண்டது.[2]அவைகள்:

  • சுவாபி தாலுகா
  • தோபி தாலுகா
  • லகோர் தாலுகா
  • ரசார் தாலுகா

மாகாண சட்டமன்றத் தொகுதிகள்

இம்மாவட்டத்திலிருந்து கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து அனுப்பிகிறது.

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads