செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
Remove ads
அமைவிடம்
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர், கல்வெட்டில் தென்கண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி அனுபாம்பிகை ஆவார். [1]
பிற சன்னதிகள்
உள் திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, நவக்கிரகம், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]
சிறப்பு
இக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது சில நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும். இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். [2]
பராமரிப்பு
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads