செட்டிநாடு

நகரத்து செட்டியார்கள் வாழும் கிராமங்கள் அடங்கிய பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 56 ஊர்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். [1] இவ்வூர்களில் தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.

செட்டிநாட்டின் எல்லைகள்

பாடுவார் முத்தப்பர் செட்டிநாட்டு எல்லைகளை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

"வெள்ளாறது வடக்கு மேற்குப்பிரான் மலையாந்

தெள்ளார் புனல் வைகை தெற்காகும் - ஒள்ளிய நீர்

எட்டிக் கடற்கிழக்கா மிஃதன்றோ நாட்டரண்சேர்

செட்டிநாட் டெல்லையென செப்பு".

செட்டிநாட்டு ஊர்கள்

சோழநாட்டின் பூம்புகார் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் 96 ஊர்களில் நிலைகொண்டு வாழ்ந்தனர் என்றும் தற்பொழுது அவ்வூர்களின் எண்ணிக்கை 76 ஆக சுருங்கிவிட்டது எனவும் கருதப்படுகிறது. இந்த 76 ஊர்களை பேராசிரியர் முனைவர் அர.சிங்காரவேலன் பின்வரும் இரண்டு வெண்பாக்களில் பட்டியலிட்டுள்ளார்:[2]

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தொன்று - நாட்டமிகும்
ஊர்பத்தாம் ஏரிகுளம் ஊருணி ஒவ்வொன்றாம்
சேர்வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்றுவரம் ஒன்றே ஆறுபுரம்
திங்கள்வகை ஒவ்வொன்று சீர்புரிகள் நான்கு
பிறஊர்கள் பத்து சிலைகுறிச்சி ஒன்றோ(டு)
அறம்வளர்ப்பார் ஊர்எழுபத் தாறு.

இவ்வெண்பாகளின்படி தற்போதைய செட்டிநாட்டில் அடங்கும் ஊர்கள் வருமாறு:

  1. அலாவக்கோட்டை
  2. தேவகோட்டை
  3. நாட்டரசன்கோட்டை
  4. அரியக்குடி
  5. ஆத்தங்குடி
  6. காரைக்குடி
  7. கீழப்பூங்குடி
  8. பலவான்குடி
  9. பனங்குடி
  10. ஆவினிப்பட்டி
  11. உலகம்பட்டி
  12. கடியாப்பட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
  13. கண்டவராயன்பட்டி
  14. கல்லுப்பட்டி
  15. கீழச்சிவல்பட்டி
  16. குருவிக்கொண்டான்பட்டி
  17. கொப்பனாப்பட்டி
  18. சிறுகூடற்பட்டி
  19. பனையப்பட்டி
  20. பிள்ளையார்பட்டி
  21. பொன்புதுப்பட்டி
  22. மகிபாலன்பட்டி
  23. மதகுப்பட்டி
  24. மிதிலைப்பட்டி
  25. தேனிப்பட்டி
  26. நற்சாந்துப்பட்டி
  27. நேமத்தான்பட்டி
  28. வலையபட்டி
  29. வேகுப்பட்டி
  30. வேந்தன்பட்டி
  31. அமராவதி புதூர்
  32. சொக்கலிங்கம்புதூர்
  33. ஆ. தெக்கூர்
  34. ஒக்கூர்
  35. கண்டனூர்
  36. கோட்டையூர்
  37. செம்மபனூர்
  38. செவ்வூர்
  39. பள்ளத்தூர்
  40. வெற்றியூர்
  41. பாகனேரி
  42. கருங்குளம்
  43. தாணிச்சாவூரணி (சொர்ணநாதபுரம்)
  44. அரண்மனை சிறுவயல்
  45. ஆறாவயல் (சண்முகநாதபுரம்)
  46. உ. சிறுவயல்
  47. சிறாவயல்
  48. புதுவயல்
  49. காளையார்மங்கலம்
  50. கொத்தமங்கலம்
  51. பட்டமங்கலம்
  52. இராயவரம்
  53. கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
  54. க.சொக்கநாதபுரம்
  55. சோழபுரம்
  56. நடராஜபுரம்
  57. நாச்சியாபுரம்
  58. வி.லட்சுமிபுரம்
  59. குழிபிறை
  60. விராமதி
  61. பில்லமங்களம். அளகாபுரி
  62. கொல்லங்குடி. அழகாபுரி
  63. கோட்டையூர். அழகாபுரி
  64. மேலச்சிவபுரி
  65. விரையாச்சிலை
  66. பூலாங்குறிச்சி
  67. அரிமழம்
  68. கண்டரமாணிக்கம்
  69. கல்லல்
  70. கானாடுகாத்தான்
  71. கோனாபட்டு
  72. சக்கந்தி
  73. ஆ.முத்துப்பட்டணம்
  74. நெற்குப்பை
  75. மானகிரி
  76. ராங்கியம்
Remove ads

நகரக் கோயில்கள்

செட்டிநாட்டில் உள்ள

1.இளையாத்தன்குடி கோயில்

2.மாத்தூர் கோவில்

3.வைரவன்கோயில்

4.இரணிக்கோயில்

5. பிள்ளையார்பட்டி கோயில்

6.நெமங்கோயில்

7.இலுப்பைக்குடி கோயில்

8.சூரைக்குடி கோயில்

9.வேலங்குடி கோயில்

ஆகிய ஒன்பது கோயில்கள் நகரக் கோவில்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது கோயில்களும் பாண்டியனால் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு வழங்கப்பட்டது.[3] ஆரம்பத்தில் செங்கல்லால் ஆன சிறிய கோயிலாக இருந்து வந்துள்ளது பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக எழுப்பட்டுள்ளது.[3]

ஒரு கோயிலை சேர்ந்த நகரத்தார்கள் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர்.[3] ஒன்பது கோயில்கள் குறித்து பேராசிரியர் முனைவர் அர.சிங்காரவேலன் பின்வரும் வெண்பாவில் பட்டியல் இடுகிறார்: [4]

பிள்ளையார் பட்டியின் வயிரவன் கோயில்
எல்லையுள நேமம் இரணியூர் மாற்றூர்
இதரக் குடியிரண்டும் ஏனை இரண்டும்
நகரத்தார் கோயில் நகர்.

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads