சென்காகு தீவு விவகாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்காகு தீவுகள் விவகாரம் (Senkaku Islands dispute) என்பது சப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் [1] தாய்வான் மக்கள் டியாயுதய் என்றும்[2] அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள ஆளில்லாத் தீவுக்குழுமமான சென்காகு தீவுகளின் உரிமை குறித்தான பிணக்கு ஆகும். சப்பானின் ஆட்சியில் இருக்கும் இந்தத் தீவுக் குழுமத்தை சீன மக்கள் குடியரசும் (PRC) [3] சீனக் குடியரசும் (ROC)[4] உரிமை கொண்டாடி வருகின்றன. இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை ஆக்கிரமித்திருந்தது.[5] இத்தீவுகளை அமெரிக்கா சப்பானிடம் ஒப்படைக்கும்போதே இரு சீன நாடுகளும் இத்தீவுகள் மீதான தங்கள் உரிமையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் முறையிட்டிருந்தன.[6] இத்தீவுகளில் உள்ள எண்ணெய், கனிம மற்றும் மீன்பிடி வளங்களுக்கு ஆளுமை உள்ள நாட்டிற்கு முழு அதிகாரம் கிடைக்கும் .[7] இத்தீவுகளின் உரிமை எந்த நாட்டிற்குரியது என்பதைக் குறித்து அமெரிக்கா அலுவல்முறையான அறிவிப்பை வெளியிடாதபோதும்[8] அமெரிக்காவிற்கும் சப்பானிற்கும் இடையே ஒப்பிட்ட இராணுவ உடன்பாட்டின்படி இத்தீவுகளை காக்க சப்பான் எடுக்கும் எந்த இராணுவ நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.[9]

செப்டம்பர் 2012இல் சப்பான் சர்ச்சைக்குரிய இத்தீவுக் குழுமத்தில் மூன்று தீவுகளை தேசியமயமாக்கியுள்ளது. இதனை அடுத்து சீனாவில் சப்பானுக்கெதிராக பெருமளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது .[10] சீனா,சப்பான் நாடுகளுக்கு இடையில் ஆண்டுக்கு $ 34,500 கோடி அளவுக்கு வணிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள சப்பானின் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்திச் சூறையாடினர். சப்பானிய நிறுவனம் தயாரிக்கும் தானுந்துகள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.[11]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads