செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஏரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரியாகும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி பிறக்கின்றது.

விரைவான உண்மைகள் செம்பரம்பாக்கம் ஏரி, அமைவிடம் ...

இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது.

இராஜராஜ சோழன் மற்றும் கொடும்பாளூர் இளவரசி திருபுவன மாதேவியார் ஆகியோரின் மகன் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட முதல் செயற்கை ஏரி இதுவாகும்.(அதே விக்கிபீடியாவில் (ஆங்கிலம்)பதிப்பு).

இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இதன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.

இந்த ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி.[1] 85.4 அடி உயரமும், 6,300 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி (3645 mcft), அதாவது, 3,645 மில்லியன் கன அடி ஆகும்.[2]

Remove ads

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads