செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
சென்னையில் உள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி (St. Joseph's College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இது புனித ஜோசப் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் தன்னாட்சிக் கல்லூரியாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. [1]
Remove ads
இருப்பிடம்
இந்த கல்லூரி சென்னை, அடையாறில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், சோழிங்கநல்லூரில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தை அடுத்து உள்ளது. இக்கல்லூரி தம்பரம் தொடருந்து நிலையத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் ராஜீவ் காந்தி சாலைக்கு அடுத்ததாக உள்ளது (முன்னர் பழைய மகாபலிபுரம் சாலை என்று அழைக்கப்பட்டது மற்றும் பிரபலமாக தகவல் தொழில்நுட்ப தாழ்வாரம் என்று அழைக்கப்படுகிறது). கிழக்கு கடற்கரை சாலைவழியாகவும் (ஈ.சி.ஆர்) இதை அணுகலாம். [2]
Remove ads
கல்வித் துறைகள்
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி பின்வரும் கல்வித் துறைகளைக் கொண்டுள்ளது. [3]
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை
- இயந்திர பொறியியல் துறை
- குடிசார் பொறியியல் துறை
- மின்னணுவியல் மற்றும் கருவி பொறியியல் துறை
- கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை
- தகவல் தொழில்நுட்பத் துறை
- உயிர் தொழில்நுட்பத் துறை
- வேதியியல் பொறியியல் துறை
மேலும் இக்கல்லூரி அளிக்கும் முதுகலை பட்டங்கள் பின்வருமாறு:
- முதுநிலை பொறியியல், ஆற்றல் மின்னணுவியல் மற்றும் செயலிகள்
- முதுநிலை பொறியியல், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- முதுநிலை பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- கணினி தொழில்நுட்பத்தில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ்
- முதுநிலை வணிக மேலாண்மை
- முதுநிலை பொறியியல், ஆற்றல் அமைப்பு
- முதுநிலை பொறியியல், மென்பொருள் பொறியியலில்
- முதுநிலை பொறியியல், உற்பத்தி பொறியியல்
- முதுநிலை பொறியியல், கட்டுப்பாடு மற்றும் கருவி பொறியியல்
- எம்பிஏ - முதுநிலை வணிக மேலாண்மை.
- முதுநிலை கணினி பயன்பாடுகள்
Remove ads
குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்
- ரெஜித் மேனன், திரைப்பட நடிகர்
- பாரத் ராஜ்
- ஒய்.எஸ் அவினாஷ் ரெட்டி எம்.பி.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads