செர்பியா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செர்பியா இராச்சியம் (Kingdom of Serbia) என்பது பால்கன் பகுதியில் அமைந்திருந்த ஒரு நாடு ஆகும். செர்பிய வேள் பகுதியின் ஆட்சியாளரான முதலாம் மிலன் 1882இல் மன்னராக தன்னை அறிவித்துக் கொண்ட போது இந்நாடு உருவாக்கப்பட்டது. 1817 முதல் இந்த வேள் பகுதியானது ஒப்ரெனோவிச் அரசமரபால் ஆட்சி செய்யப்பட்டது. இடையில் குறுகிய காலத்திற்கு மட்டும் கரதோர்தெவிச் அரசமரபால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. உதுமானியப் பேரரசின் முதன்மை நிலையின் கீழ் இந்த வேள் பகுதியானது 1867இல் கடைசி உதுமானிய துருப்புகள் பெல்கிறேடில் இருந்து விலகிச் சென்ற போது நடைமுறைப்படி முழுமையான சுதந்திரத்தை அடைந்தது. பெர்லின் காங்கிரசு 1878இல் செர்பிய வேள் பகுதியின் அதிகாரப்பூர்வ விடுதலையை அங்கீகரித்தது. நிசவா, பிரோத், தோப்லிகா மற்றும் வரஞ்சே ஆகிய மாவட்டங்கள் செர்பியாவின் தெற்குப்பகுதியில் இணைந்தன.[1][2][3][4][5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads