செலீனிக் அமிலம்

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

செலீனிக் அமிலம் (Selenic acid ) என்பது H2SeO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியத்தின் ஆக்சோ அமிலச் சேர்மமான இதன் மூலக்கூறு அமைப்பு சரியாக (HO)2SeO2.என்ற அமைப்பில் காணப்படுகிறது. நிறமற்று இருக்கும் இச்சேர்மம் சில பயன்களைக் கொண்டிருந்தாலும் இதனுடைய சோடியம் செலீனேட்டு கண்ணாடி உற்பத்தி மற்றும் விலங்கின உணவாகவும் பயன்படுகிறது.[2]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

கட்டமைப்பும் பிணைப்பும்

வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையின் படி செலீனிக் அமில மூலக்கூறானது நான்முக வடிவத்தில் பிணந்துள்ளது. Se–O பிணைப்பு 161 பை.மீ [3] பிணைப்பு நீளம் கொண்டுள்ளது. திண்மநிலை செலீனிக் அமிலம் செஞ்சாய்சதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது.[4]

தயாரிப்பு

செலீனியம் சேர்மங்களை தாழ் ஆக்சிசனேற்ற நிலைகளில் ஆக்சிசனேற்றம் செய்து செலீனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. செலீனியம் ஈராக்சைடுடன் ஐதரசன் பெராக்சைடு சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி செலீனிக் அமிலத்தினைத் தயாரிக்கும் முறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

SeO
2
+ H
2
O
2
H
2
SeO
4

கந்தகமூவாக்சைடை நீரேற்றம் செய்து கந்தக அமிலம் தயாரிப்பது போல் செலீனியம் மூவாக்சைடை நீரேற்றம் செய்து செலீனிக் அமிலம் நடைமுறையில் தயாரிக்கப்படுவதில்லை[3]. இதற்குப் பதிலாக செலீனசமிலத்துடன் (H2SeO3) ஆலசன்களான குளோரின் அல்லது புரோமின் சேர்த்து அல்லது பெர்மாங்கனேட்டு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து செலீனிக் அமிலத்தைத் தயாரிக்கிறார்கள்[5]. குளோரின் அல்லது புரோமினை ஆக்சிசனேற்றும் செயலியாக பயன்படுத்தும்போது ஐதரோ குளோரிக் அமிலம் அல்லது ஐதரோ புரோமிக் அமிலம் உடன் விளை பொருளாக விளைகிறது. இவை செலீனிக் அமிலத்தை செலினசமிலமாக குறைக்கும் என்பதால் இவற்றை கரைசலில் இருந்து நீக்க வேண்டியது அவசியமாகிறது[6].

நீர் விரவலில் உள்ள தனிம நிலை செலீனியத்தை குளோரின் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்தும் வேறுமுறையில் செலீனிக் அமிலம் தயாரிக்கலாம்:[5]

Se + 4 H
2
O
+ 3 Cl
2
H
2
SeO
4
+ 6 HCl

இக்கரைசலை வெற்றிடத்தில் 140 0 செல்சியசு வெப்பநிலைக்குள் ஆவியாக்கினால் நீரற்ற படிகநிலை செலீனிக் அமிலம் பெறலாம்[7].

Remove ads

வினைகள்

கந்தக அமிலத்தைக் காட்டிலும் செலீனிக் அமிலம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகத் திகழ்கிறது [5].அடர்த்தியான லகரைசல்கள் பாகுத்தன்மையுடன் காணப்படுகின்றன. படிக வடிவ ஒருநீரேற்று மற்றும் இருநீரேற்று பொன்றவை அறியப்படுகின்றன,ஒருநீரேற்று 26 0 செல்சியசு வெப்பநிலையிலும் இருநீரேற்று - 51.7 செல்சியசு வெப்பநிலையிலும் உருகுகின்றன.[3]

H
2
SeO
4
+ 2 H+
+ 2 Cl
H
2
SeO
3
+ H
2
O
+ Cl
2

குளோரைடுகளில் இருந்து குளோரினை வெளியேற்றும் திறன் கொண்டுள்ள இவ்வமிலம் இச்செயல் முறையின் போது செலீனசமிலமாக குறைகிறது. கந்தக அமிலத்தைக் காட்டிலும் செலீனிக் அமிலம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகத் திகழ்கிறது. குளோரைடுகளில் இருந்து குளோரினை வெளியேற்றும் திறன் கொண்டுள்ள இவ்வமிலம் இச்செயல் முறையின் போது செலீனசமிலமாக குறைகிறது.:[5]

2 H
2
SeO
4
→ 2 H
2
SeO
3
+ O
2

200 0 செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இவ்வமிலம் சிதைவடைந்து ஆக்சிசனை வெளிவிட்டு செலினசமிலமாக மாறுகிறது:[5]

2 H
2
SeO
4
→ 2 H
2
SeO
3
+ O
2

பேரியம் உப்புகளுடன் செலீனிக் அமிலம் வினைபுரிந்து சல்பேட்டுடன் ஒத்த வரிசைச் சேர்மமாக BaSeO4 சேர்மத்தை வீழ்படிவாக்குகிறது. பொதுவாக செலீனேட்டு உப்புகள் சல்பேட்டு உப்புகளைப் போல் செயல்படுகின்றன. ஆனால் இவை அதிகமாக கரைகின்றன. தொடர்புடைய சல்பேட்டு உப்புகளுக்கு இணையான படிக அமைப்பையே செலீனேட்டுகளும் பெற்றிருக்கின்றன[3].

புளோரோ கந்தக அமிலத்துடன் செலினிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் செலீனயில் புளோரைடு கிடைக்கிறது.[7]

H
2
SeO
4
+ 2 HO
3
SF
SeO
2
F
2
+ 2 H
2
SO
4

சூடான அடர் செலீனிக் அமிலம் தங்கத்துடன் வினைபுரிந்து செம்மஞ்சள் நிற தங்க(III) செலீனேட்டு உருவாகிறது:[8]

2 Au + 6 H
2
SeO
4
Au
2
(SeO
4
)
3
+ 3 H
2
SeO
3
+ 3 H
2
O

பயன்கள்

செலீனிக் அமிலம் ஒரு தனிச்சிறப்பு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads