சோமசுந்தரம் நடேசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமசுந்தரம் நடேசன் (Somasundaram Nadesan, 11 பெப்ரவரி 1904 - டிசம்பர் 21, 1986) என்பவர் இலங்கையில் பிரபலமான ஒரு வழக்கறிஞரும், மேலவை உறுப்பினரும் (செனட்டர்) ஆவார். 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடேசன், 1972 ஆம் ஆண்டில் செனட் சபை கலைக்கப்படும் வரையில் உறுப்பினராக இருந்த ஒரே ஒரு மேலவை உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், ஆனைக்கோட்டையில் பிறந்த நடேசன்[1][2][3] தனது ஆரம்பக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், பின்னர் புலமைப்பரிசில் பெற்று கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4] பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டம் பயின்று 1932 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார்.[5]
1954 ஆம் ஆண்டில் இராணி வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வயதில் குறைந்த இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றார். 55 ஆண்டுகள் இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டில் வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இலங்கை குடிமுறை உரிமைகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஆவார்.[1][3][5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads