சோழிங்கநல்லூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

சோழிங்கநல்லூர்map
Remove ads

சோழிங்கநல்லூர் (Sholinganallur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் உருவான புதிய தொகுதியான இது சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4] சோழிங்கநல்லூர் தென்சென்னை மக்களவைத் தொகுயில் இடம்பெறுகிறது.[5]

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சோளிங்கநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழிங்கநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பொருளாதாரம்

சோழிங்கநல்லூரில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இன்போசிஸ்[7], விப்ரோ[8], டிசிஎசு, எச்.சி.எல், காக்னிசன்ட் போன்ற பல பெரிய மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads