சோவனிக கலாசாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோவனிக கலாசாரம் (Soanian) என்பது சுமார் 5,00,000 முதல் 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தின்[1] சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும். செப்பனிடப்படாத ஆயுதங்களான தழும்பழியின் சமகாலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பாக்கித்தானின் சிவாலிக் மலைப் பிரதேசத்தில் உள்ள இப்பகுதி சோவன் பள்ளத்தாக்கு எனப்படுகிறது. சோவனிகக் கலாச்சாரத் தளங்கள் இன்றைய இந்தியாவின் சிவாலிக் பகுதி, நேபாளம் மற்றும் பாக்கித்தான் பகுதிகளில் இணைந்து காணப்படுகின்றன[2].
இராவல்பிண்டியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதியலா மற்றும் காசலா கிராமங்களில் பாயும் சோவன் ஆற்று வளைவுகளில் நூற்றுக்கணக்கான கூழாங்கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சாண்ட்ரா என்றவிடத்தில் கற்களால் ஆக்கப்பட்ட கைக்கோடாரிகளும் வெட்டுக்கத்திகளும் கிடைக்கப்பெற்றன.
சுமார் 1,87,000 முதல் 2,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக் கூடுகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன[3][4][5][6]. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன. சோவன் ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்குகளில் தொல்லுயிர்ப் புதை படிவுகள் தாங்கிய பாறைகள் காணப்பட்டன. மேலும் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மானினத்தைச் சார்ந்த விலங்கு, காண்டாமிருகம், முதலைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் உணவைக் கொறித்து உண்ணும் வகை விலங்குகள் போன்றவற்றின் தொல்படிமங்களும் இப்பகுதியில் காணப்பட்டன. இவற்றில் சிலபடிமங்கள் பாக்கித்தானின் இசுலாமாபாத்தில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதன் முதலில் 1936[7] ஆம் ஆண்டு எல்மட் டெ டெர்ரா என்பவர் " சோவனிக கலாச்சாரம் " என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். இருந்தாலும் 1928 ஆம் ஆண்டிலேயே[8]டி.என் வாடியா இந்த தொல்பொருள் கருவிகளின் தொகுதியை அடையாளம் கண்டிருந்தார். இக்கருவிகளின் அமைப்பு நுணுக்கத்தைத் தீர்மானிக்க சிடிபன் லைசெட் என்பவரால் தொடர்ச்சியாகத் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சோவனிக கலாச்சாரத்தினர் பயன்படுத்திய தொல்கருவிகள் மூன்றாம்நிலை செதிற்கல் நுணுக்கத்தின் உட்கூறுகள் என்று அவர் தன்னுடைய ஆய்வின் முடிவாகக் குறிப்பிட்டுள்ளார்[9]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads