ஜமுனா (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜமுனா (30 ஆகத்து 1936 – 27 சனவரி 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்தார். 1953இல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1]
எல். வி. பிரசாதின் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.[2]
Remove ads
இளமைக்காலம்
ஜனா பாய் என்ற இயற்பெயர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார்.[1] நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.
தொழில்
ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்தார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989இல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Remove ads
விருது
- 1968: சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - மில்லன்
- 2008: என்டிஆர் தேசிய விருது
திரைப்படங்கள்
தமிழ்
- மிஸ்ஸியம்மா (1955)
- தெனாலி ராமன் (1956)
- தங்கமலை ரகசியம் (1957)
- பொம்மை கல்யாணம் (1958)
- நல்ல தீர்ப்பு (1959)
- தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
- மருதநாட்டு வீரன் (1961)
- நிச்சய தாம்பூலம் (1962)
- மனிதன் மாறவில்லை (1962)
- குழந்தையும் தெய்வமும் (1965)
- அன்பு சகோதரர்கள் (1973)
- தூங்காதே தம்பி தூங்காதே (1983)
மறைவு
நடிகை ஜமுனா உடல்நலக் குறைவால் ஐதராபாதில் தனது 86 ஆவது அகவையில் 27 சனவரி 2023 அன்று காலமானார்.[3][4][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
