ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். இங்கு கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்களைத் தவிர பல்சுவை கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக விளங்கிய ஜவஹர்லால் நேருவின் பெயரைக் கொண்டு விளங்குகிறது. இங்கு விளையாட்டு நிகழ்ச்சிகளை 78,000 பேர்களும் [1] கேளிக்கை நிகழ்ச்சிகளை 130,000 பேர்களும் காண இயலும். இருக்கைகளின் அடிப்படையில் இவ்வரங்கம் இந்தியாவின் மூன்றாவது பெரும் விளையாட்டரங்கமாக விளங்குகிறது. உலகளவில் இது 51ஆவது இடத்தில் உள்ளது. இங்குதான் இந்திய ஒலிம்பிக் சங்கம் இயங்குகிறது.
1982ஆம் ஆண்டு 9வது ஆசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தியபோது இந்திய அரசு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தைக் கட்டியது. இங்கு 1990ஆம் ஆண்டு ஆசிய தடகள சாதனைப் போட்டிகள் நடத்தப்பட்டது. 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் இங்கு நடைபெற்றன. இவ்விளையாட்டுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு வேலைகளால் இதன் இருக்கைகள் 60,000ஆக குறைந்துள்ளது.
Remove ads
நிகழ்த்தப்பட்ட விளையாட்டுகளும் பிற நிகழ்ச்சிகளும்
துடுப்பாட்டம்
இவ்விளையாட்டரங்கத்தில் 1984ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராகவும் 1991ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிராகவும் இந்திய துடுப்பாட்ட அணியினர் ஆடிய ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.துடுப்பாட்ட வீரர் கெப்ளர் வெசல்ஸ் இரண்டு பந்தயங்களிலும் ஆடியுள்ளார்:ஆஸ்திரேலிய அணிக்கு ஆடியபோது 107 ஓட்டங்களும் பின்னர் தென்னாபிரிக்கா சென்று அவ்வணியில் ஆடியபோது 90 ஓட்டங்களும் எடுத்தது இம்மையத்தின் ஓர் தனிசிறப்பு வாய்ந்த தரவாகும்.
கால்பந்து
சில தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் (தற்போது இல்லை) நடந்துள்ளன.
2010 பொதுநலவாயம் விளையாட்டுகள்
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் துவக்கவிழா மற்றும் இறுதி விழாக்களை ஏற்றுள்ளது.27 சூலை 2010 அன்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.
29-30 சூலை 2010யில் முதன்முறையாக ஆசிய அனைத்தாசிய தடகள சாதனைப்போட்டிகள் நடத்தப்பட்டன.பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்தும் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
