ஜாக்பாட் (2019 திரைப்படம்)

கல்யாண் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஜாக்பாட் (2019 திரைப்படம்)
Remove ads

ஜாக்பாட் (Jackpot) 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி ஆக்ஷன் நகைச்சுவைத் திரைப்படம் [1] இயக்குநர் கல்யாண் எழுதி இயக்கியுள்ளார்.[2] இந்த படத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், யோகி பாபு மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 

விரைவான உண்மைகள் ஜாக்பாட் Jackpot, இயக்கம் ...

நடிகை ரேவதி அரங்கேற்ற வேளை மற்றும் குலேபகாவலி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்த மாசா என்ற கதாப்பாத்திரத்தை மூன்றாவது முறையாக ஏற்று நடித்திருந்தார்.[3][4] இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மென்ட் பேனரில் தயாரித்தார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தின் முதன்மை புகைப்படம் எடுத்தல் 12 பிப்ரவரி 2019 அன்று தொடங்கியது.[5] படம் 2 ஆகஸ்ட் 2019 அன்று வெளியிடப்பட்டது.[6]

இத்திரைப்படம் சமண தமிழ் காப்பியமான மணிமேகலையில் வருகின்ற அட்சயப் பாத்திரம் என்ற பொருளை மையமாக கொண்டு வடிமைக்கப்பட்டது. இந்த அட்சயப் பாத்திரத்தில் நாம் இடுகின்ற பொருள் பல மடங்கு பெருகி எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Remove ads

கதை

படம் 1918 இல் திறக்கப்பட்டு, ஒரு பால்காரர் கிணற்றைத் தோண்டும்போது ஒரு அட்சைய பாத்திரத்தினை கண்டெடுக்கிறார். அந்தப் பாத்திரத்தில் பாலை கறந்து ஊற்றியப் பிறகு, தவறுதலாக அந்த பாத்திரம் சாய்ந்து அதிலிருந்து அளவில்லாத பால் வருவதை காண்கிறார். அதனை அட்சையப் பாத்திரம் என்று உணர்கிறார். அதன் பின்பு அந்தப் பாத்திரத்தைக் கொண்டு பெரிய பணக்காரர் ஆகிறார். அந்த ரகசியம் தெரிந்தவர்களால் அட்சயப் பாத்திரம் திருடர்கள் மூலம் திருடப் படுகிறது. ஆனால் அந்த பாத்திரத்தை திருடர்கள் நதியில் தவற விடுகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு வயதான பெண்மணி அந்தப் பாத்திரத்தை கண்டெடுக்கிறார். அவர் இட்லிகளை விற்கும் பணியை செய்வதால் எண்ணற்ற மக்களுக்கு உணவளிக்கிறார். அதன் மகிமையை உணர்ந்து ஓரிடத்தில் மறைத்து வைக்கிறார்.

அந்த வயதான பெண்மணி மூலம் அட்சையா என்கிற ஜோதிகாவும், மாஷா என்கிற ரேவதியும் அட்சய பாத்திரத்தை பற்றி அறிகிறார்கள். அந்தப் பாத்திரத்தை அடைய இருவரும் முயல்வதும், வெற்றி பெற்றார்களா என்பதும் கதையாகும்.

Remove ads

நடிப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads