ஜிதேந்திர பிரசாதா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜிதேந்திர பிரசாதா (Jitendra Prasada) (1938 நவம்பர் 12- 2006 சனவரி 16 [1] ) ஓர் இந்திய அரசியல்வாதியான இவர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தார். 1991இல் ராஜீவ் காந்தி மற்றும் 1994இல் பி.வி.நரசிம்ம ராவ் போன்ற இந்தியாவின் இரண்டு பிரதமர்களின் அரசியல் ஆலோசகராகவும், இருந்தார்.

விரைவான உண்மைகள் ஜிதேந்திர பிரசாதா, தொகுதி ...

பிரசாத் , 2000 நவம்பர் 9, அன்று காங்கிரசு கட்சியின் தலைவர்த் தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டார்.[2] ஆனால் இவர் தோற்கடிக்கப்பட்டார். இவர் 2001 சனவரி 16 அன்று புதுடில்லியில் நோயால் இறந்தார்.[1]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

ஜிதேந்திர பிரசாத், குன்வர் ஜோதி பிரசாத் மற்றும் பமீலா தேவி ஆகியோருக்கு சாஜகான்பூரில் 1938 நவம்பர் 12 அன்று பிறந்தார். இவரது பாட்டி பூர்ணிமா தேவி இரவீந்திரநாத் தாகூரின் மருமகள் மற்றும் தாய் பமீலா தேவி கபுர்தலா மாநில அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர், சாம் இக்கின்பாதாம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் கல்வி பயின்றார்.[3] நைனித்தால், செர்வுட் கல்லூரி, இலக்னோ கொல்வின் தாலுக்தார் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களிலும் பயின்றார். இவர் 1973 சனவரி 27, அன்று காந்தா என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஜிதின் பிரசாதா என்ற மகனும், ஜானவி என்ற மகளும் உள்ளனர். ஜிதேந்திர பிரசாத்தின் குடும்பம் சாஜகான்பூரின் பிரசாத் பவனில் வசிக்கிறது.

Remove ads

அரசியல் வாழ்க்கை

பிரசாத் 1970இல் உத்தரபிரதேச சட்ட மேலவையின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். ஷாஜகான்பூர் தொகுதியில் இருந்து 1971இல் 5 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 முதல் 1999 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். சாஜகான்பூர் தொகுதியில் இருந்து 1999இல் மீண்டும் 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads