ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா

From Wikipedia, the free encyclopedia

ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்காmap
Remove ads

ஜும்ஆ பள்ளிவாசல் (Jama Masjid Gulbarga) இந்தியா நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் குல்பர்கா மாவட்டத்தில் குல்பர்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.

விரைவான உண்மைகள் ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா, அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

அமைப்பு

இப்பள்ளிவாசலும் ஐதராபாத்து நகரில் உள்ள எசுப்பானியப் பள்ளிவாசலும் இந்தியாவில் எசுப்பானியா நாட்டின் கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டவை.[1].[2][3][4]

வரலாறு

பாமினி சுல்தானகத்தை தோற்றுவித்த அலாவுதின் பாமன் சா ஆட்சியில் கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டை கட்டப்பட்டது. பின்னர் முதலாம் முகம்மது ஷா (1358-75) மன்னரால் இப்பள்ளிவாசல் கி.பி.1347 இல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே கட்டப்பட்டது.அவரது ஆட்சியில் குல்பர்கா பாமினி சுல்தானகத்தின் தலைநகராக இருந்தது.[5]

கட்டிடக்கலை

ஜும்ஆ பள்ளிவாசல், குல்பர்கா மினார் இல்லாமல் கட்டப்பட்டது.இப்பள்ளிவாசல் குல்பர்கா கோட்டைக்கு உள்ளே பெரிய குவிமாடம் கொண்டு கட்டப்பட்டது.இது எசுப்பானியா நாட்டின் மூரிஸ் வடிவமைப்பில் கி.பி.1367 இல் கட்டப்பட்டது.[6] எசுப்பானியா நாட்டின் கோர்தோபா பள்ளிவாசல் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[7] மேற்கே பெரிய குவிமாடம்,நான்கு மூலைகளில் சிறிய குவிமாடங்கள் கொண்டுள்ளது.முற்றத்தில் 63 சிறிய குவிமாடங்கள் கொண்டுள்ளது. தெற்காசியாவில் அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பில் சிறந்த பள்ளிவாசலாக கருதப்படுகிறது.[8]

புகைப்படங்கள்

வெளி இணைப்புகள்


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads