ஜெய்ப்பூர் இல்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்ப்பூர் இல்லம் (Jaipur House) என்பது இந்தியாவின் புது தில்லி நகரத்தில் உள்ள ஜெய்ப்பூர் மகாராஜாவின் முன்னாள் இல்லமாகும். இது ராஜ்பத்தின் முடிவில், இந்தியாவின் வாயிலின் எதிரில் அமைந்துள்ளது.

Remove ads
வரலாறு
ஜெய்ப்பூர் இல்லமானது 1936-இல் லுட்யென்சு தில்லியைக் கட்டிய பிறகு, சார்லஸ் ப்லோம்ஃபீல்டால் வடிவமைக்கப்பட்டது.[1]
இன்று இது தேசிய நவீனக் கலைக்கூடத்தினைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் முதன்மையான கலைக்கூடமாக 1954-இல் கலாச்சார அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.[1]
கட்டிடக்கலை
இந்த அமைப்பு வண்ணத்துப்பூச்சி அமைப்பையும் மையக் குவிமாடத்தையும் கொண்டுள்ளது. இது சிவப்பு, மஞ்சள் மணற்கற்களால் மூடப்பட்டிருக்கும். அரண்மனையின் பின்புறம் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. தரை தளத்தில் உள்ள முக்கிய நடன மாடம் வழியாக இங்குச் செல்ல முடியும். நடன மாடத்தில் மரத்தினால் செய்யப்பட்டப் பதாகைகள் போடப்பட்டுள்ளது.
இல்லத்தின் உள்ளே மத்தியக் குவிமாடத்தின் கீழ் பிரதான மண்டபம் உள்ளது. மேல் தளத்திற்குச் செல்லப் பெரிய சுழல் படிக்கட்டு உள்ளது.
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads