தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா

இந்தியாவின் கேரள மாநிலப் பூங்கா From Wikipedia, the free encyclopedia

தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்காmap
Remove ads

தங்கசேரி அணைகரை சுற்றுலாப் பூங்கா (Thangassery Breakwater Tourism Park) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு சுற்றுலாத் தலமாகும். [1] கொல்லம் மாவட்டத்தில் கடலோர நகரமான தங்கசேரியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று பூங்கா திறக்கப்பட்டது, [2] அதன் பின்னர் ஏராளமான பார்வையாளர்களையும் ஈர்த்து வருகிறது. [3]

விரைவான உண்மைகள் தங்கசேரி அணைகரை சுற்றுலாப் பூங்கா Thangassery Breakwater Tourism Park, வகை ...

அரபிக் கடலின் அழகிய காட்சிகளைக் கொண்ட இந்த பூங்கா ஓர் அழகான நீர்முகப்பு பகுதி இடமாகும். [4] குழந்தைகள் விளையாட்டு மைதானம், படகு சவாரி ஏரி, உணவு அரங்கம் மற்றும் பல நினைவு பரிசு கடைகள் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. 400 பேர் வரை தங்கக்கூடிய திறந்தவெளி அரங்கமும் இங்கு உள்ளது. [5] கடலோர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறையால் தொடங்கப்பட்டது இந்த தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா திட்டமாகும் [6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads