தசுன் சானக்க
இலங்கை மட்டைப்பந்து வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தசுன் சானக்க (Dasun Shanaka, பிறப்பு: 9 செப்டம்பர் 1991), இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் நீர்கொழும்பு புனித பிட்டர்சு கல்லூரி, மார்சி ஸ்டெல்லா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். இவர் 2015 சூலை மாதத்தில் பாக்கித்தானுக்கு எதிரான இலங்கை அணியின் பன்னாட்டு இருபது20 அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2015 ஆகத்து 1 இல் தனது முதலாவது இ20ப போட்டியில் கலந்து கொண்டார்.[3]
2016 மே மாதத்தில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, லிசுட்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக முதல்-தர ஆட்டத்தில் கலந்து கொண்டு சதம் அடித்தார்.[4][5] 2016 மே 19 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.[6] இவர் இலங்கையின் 134வது தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[7] இவர் தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து தலைவர் அலஸ்டைர் குக்கின் இலக்கைக் கைப்பற்றினார். 2019 பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் தலைவராக இருந்து இளம் அணியுடன் பாக்கிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்தார்.தற்போது மட்டுப்படுத்தபட்ட ஓவர் ஆட்டங்களில் இலங்கை கிரிக்கெட் அணி தலைவராக உள்ளார்.LPL தொடரில் தம்புள்ளை வைக்கிங் அணியின் தலைவராக உள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads