தஞ்சை பெரியகோயில் தீவிபத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரகதீசுவரர் கோயில் தீவிபத்து (Brihadeeswarar temple fire) என்பது தமிழ்நாட்டின் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 1997 சூன் 7 அன்று நேர்ந்த தீவிபத்தைக் குறிக்கிறது. இந்த நேர்ச்சியானது பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலைக் கூரையில் பட்ட தீப்பொறியினால் ஏற்பட்டது. இதனால் மொத்தம் 48 பேர் இறந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதற்கு காரணமாக கோயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெப்பவெடிப்பியானது யாகசாலைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக ஓலைக் கூரை மீது விழுந்ததால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த தீவிபத்தால் ஏற்பட்ட குழப்பத்தால் கோயிலின் கிழக்குத் திசையில் கோயிலின் ஒரே நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டு பலர் மிதிபட்டனர்.
மீட்பு நடவடிக்கையை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் டி. என். இராமநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ். கே. டோக்ரா, காவல்துறைத் துணைத்தலைவர் ஜெயந்த் முரளி, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கண்காணித்தனர். மீட்பு நடவடிக்கைகளில் ஊர்காவல் படையினர், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர். தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 1,00,000, கடுமையான காயமுற்றவர்களுக்கு 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது.
Remove ads
நிகழ்வு

1997 ஆம் ஆண்டு கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நிகழ்ந்த தீ விபத்தில் 48 பேர் இறந்தனர் மற்றும் 86 பேர் காயமடைந்தனர்.[1][2] இந்நிகழ்வு குடமுழுக்கு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது.[3] கோவிலில் புனித விழாவை நடத்திட 120-க்கும் மேற்பட்ட குருக்கள் இருந்தனர் என்று கூறப்பட்டது.[4] கோயில் வளாகத்தில் யாகசாலை சடங்கு விழாக்களுக்காக ஓர் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அருகில் வைக்கப்பட்ட பட்டாசு இந்தப் பந்தல் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான வெய்யிலில் காய்ந்துபோயிருந்த அந்த பந்தல் கூரையில் தீ வேகமாக பரவியது என நம்பப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பீதியில் அங்கிருந்து வெளியேற முயன்றவர்களால், கோயிலின் கிழக்குத் திசையில் கோயிலுக்கு உள்ள ஒரே நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது.[5] இருப்பினும், மின்னாக்கியிலிருந்து ஏற்பட்ட தீப்பொறியாலேயே தீவிபத்து ஏற்பட்டது என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது. பெரும்பாலான இறப்புக்களுக்குக் காரணமாக கார்பன் மோனாக்சைடால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தது, மற்றும் ஒரு சில மரணங்கள் தீக்காயங்களாலும் ஏற்பட்டது. யாக சாலையில் நெய் போன்ற தீயிக்கு ஒத்துழைப்பான பல பொருட்கள் இருந்தன இதனால் தீ வேகமாக பரவியது. கோயிலுக்கு உள்ள ஒரே நுழைவாயிலும் குறுகியதாக இருந்ததால், பீதியில் வெளியேற முயன்ற பலர் நெரிசலில் சிக்கி கற்கள் மீது விழுந்தனர்.[6] எரிந்து விழுந்த யாகசாலைக் கூரைக்கு அடியில் இருந்து 37 உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தீவிபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றி இருந்த மின்சார இணைப்பு வலையமைப்பானது, மீட்பு நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைத்துவிட்டது என்றனர்.[7]
மீட்பு நடவடிக்கையை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் டி. என். இராமநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ். கே. டோக்ரா, காவல்துறைத் துணைத்தலைவர் ஜெயந்த் முரளி, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கண்காணித்தனர். மீட்பு நடவடிக்கைகளில் ஊர்காவல் படையினர், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர.[8] கோயில் வளாகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு தகவல் மையங்கள் திறக்கப்பட்டன.[9]
Remove ads
பின்விளைவுகள்
இந்த நேர்சியானது மாநிலத்தில் நடந்த நான்கு மிகப்பெரிய தீவிபத்துக்களில் ஒன்றாகும், பிற விபத்துகள் 2001 ஆகத்து 6 இல் ஏர்வாடியில் நடந்த விபத்தில் 30 மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் இறந்தனர். அடுத்து 2004 சனவரி 23 அன்று திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்தில் 57 பேர் இறந்தனர். அடுத்து கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து இதில் 94 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.[10] தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 1,00,000, கடுமையான காயமுற்றவர்களுக்கு 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது. விசாரணை மேற்கோண்ட காவல்துறைத் துணைத்தலைவர் (டிஜிஐ), இதற்கு முந்தைய வாரத்தில் ஈஸ்வரி நகரிலுள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் ஒரு குண்டுவெடிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றாலும், இந்த நிகழ்வைப் பொறுத்த அளவில் நாசவேலைக்கு எந்தவொரு சாத்தியக் கூறும் இல்லை என்று தெரிவித்தார்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

