தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை

பேராக்; சிலாங்கூர் மாநிலங்களில் முக்கியமான நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia

Remove ads

தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 1 (மலேசியா) 1; (ஆங்கிலம்: Tanjung Malim–Slim River Highway அல்லது Malaysia Federal Route 1; மலாய்: Lebuhraya Tanjung Malim–Slim River) என்பது மலேசியா, பேராக் - சிலாங்கூர் மாநிலங்களில் முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.

விரைவான உண்மைகள் தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை Tanjung Malim–Slim River Highway, வழித்தடத் தகவல்கள் ...

மலேசியாவின் முதல் சுங்கச் சாவடி நெடுஞ்சாலையான இந்த நெடுஞ்சாலை; 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் புகழ்பெற்றது. தஞ்சோங் மாலிம் - சிலிம் ரிவர் பழைய பாதை 33 கி.மீ. நீளம் கொண்டது. அத்துடன் ஒரு காட்டுப் பகுதியில் குன்று பகுதிகளில் ஊடுருவிச் சென்றது.[1]

Remove ads

பொது

இந்தச் சாலை 1966-ஆம் ஆண்டு சுங்கச்சாவடியாக மேம்படுத்தப்பட்டு, அதே ஆண்டில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி காலை 6 மணிக்கு கட்டண வசூல் தொடங்கியது. கார்களுக்கு 50 காசு, பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு RM1 மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 20 காசு கட்டணம் வசூலிக்கப்பட்டது.[2]

1994-ஆம் ஆண்டில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலை திறக்கப்பட்டதும், தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடி அகற்றப்பட்டு, கட்டணமில்லா நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[2]

Remove ads

மேலும் பார்க்க

மலேசிய விரைவுச்சாலை முறைமை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads