தண்டகாரண்யம் (திரைப்படம்)
இந்தியத் தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டகாரண்யம் என்பது அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்திற்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கும் இரண்டாம் திரைப்படமாகும். முந்தைய படத்தைப் போலவே இப்படத்தையும் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.[1] இத்திரைப்படம் 19 செம்படம்பர் 2025 அன்று வெளியானது.
Remove ads
நடிகர்கள்
- அட்டகத்தி தினேஷ்
- கலையரசன்
- ரித்விகா
- வின்சு சாம்
- சபீர் கல்லரக்கல்
- பாலா சரவணன்
- அருள்தாஸ்
- சரண்யா இரவிசந்திரன்
- யுவன் மயில்சாமி
தயாரிப்பு
படத்தின் முதல் தூண்டோட்டம் 25 செப்டம்பர் 2025-இல் வெளியானது.[2] தூண்டோட்டத்தில் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை, இராணுவப் படைகளின் தேடுதல் வேட்டை போன்றவை இடம்பெற்றிருந்தது.[3] தண்டகாரண்யம் என்பது இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு காடாகும். இதனால் இப்படம் காடு வாழ் மக்களைப் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[4] லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்டகத்தி தினேஷ் இப்படத்தில் நடித்துள்ளார்.[3]
Remove ads
வெளியீடு
தண்டகாரண்யம் 19 செப்டம்பர் 2025 அன்று வெளியானது.[5] இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.[6]
விமர்சனங்கள்
தினமணி வலைதளத்தில் எழுதிய விமர்சனத்தில் "ஆண்டாடு காலமாக பல பழங்குடிகளை எவ்வளவோ அதிகார அமைப்புகள், அரசியல்வாதிகள் தங்கள் சக்திகள் மூலம் அம்மக்களின் வாழ்விற்கே விலங்கிட்டுள்ளனர். அதனைக் கேள்வி கேட்கும் விதமாக அதியன் ஆதிரை அந்த அதிகாரங்களுக்கு கைவிலங்கிடும் முயற்சியில் ஒரு வெற்றியைக் கண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாழ்வியலுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் தண்டகாரண்யம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[7] ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "கதையும், நேர்த்தியான தொழில்நுட்ப ஆக்கமும் கைகொடுத்தாலும், அழுத்தமும் தெளிவும் நிதானமும் இல்லாத திரைக்கதையால், போதுமான வலியைக் கடத்தாமல் கடந்து போகிறது இந்த 'தண்டகாரண்யம்'" என்று எழுதினர்.[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads