தண்டகாரண்யம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தண்டகாரண்யம் (சமக்கிருதம்: दण्डकारण्य),(ஆங்கிலம்: Dandakaranya), இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது. சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி. மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிகளை உள்ளடக்கியது தண்டகாரண்யம்.இராமாயணத்தில் குறிக்கப்படும், தண்டகாரண்யம் (தண்டக+ஆரண்யம்) அடர்ந்த காட்டுப்பகுதியாகும். தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே தண்டகாரண்யம் என்பதன் பொருள்.[1][2]

விரைவான உண்மைகள் நாடு, பகுதி ...

2000ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவான போது, தண்டகாரணயத்தின் பகுதிகள் கங்கேர் (1999), தந்தேவாடா(2000), பிஜப்பூர் (2007), நாராயண்பூர்(2007), கோண்டாகாவ் (2012), சுக்மா(2012) என ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

தண்டகாரண்யம் வனப்பகுதியில் வாழும் மக்களில் நான்கில் மூன்று பங்கினர் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். அவர்களில் முக்கியமான பழங்குடி இனங்கள் 1. கோண்டு மக்கள் , 2. முரியாக்கள், 3. ஹல்பாக்கள் மற்றும் 4. அபுஜ்மரியாக்கள்.

தண்டகாரண்யப் பகுதி நள வம்சம், நாகர்கள், காகதீய வம்சம், சாளுக்கியர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டது.

Remove ads

இராமாயணத்தில்

இராமாயண இதிகாசத்தில் இராமர் 14 ஆண்டு வன வாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சில காலம் தண்டகாரண்யத்தில் கழித்தார் என இராமாயண இதிகாசம் கூறுகிறது. இந்த தண்டகாரண்யத்தில், மாரீசன் தங்க மான் வடிவில் உலாவினான். சீதை, அந்த தங்க மானை பிடித்துத் தரும்படி கேட்டதால், இராமன் மற்றும் இலக்குவன் தங்க மானை தேடிச் சென்றனர். சீதை தனிமையில் இருக்கையில், இராவணன் கவர்ந்து, இலங்கையின் அசோக வனத்தில் சிறை வைத்த நிகழ்வுகள், இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் கூறப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads