தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தண்டீஸ்வரர் ஐயனார் திருக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊருக்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் அல்லிநகரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயில், ஒரு ராஜகோபுரத்தையும், ஒரு கருவறை விமானத்தையும், ஒரு தெப்பக்குளத்தையும் உள்ளடக்கியது. மூலவரைச் சுற்றியுள்ள பிரகாரங்களில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்குப் பக்தர்கள் வருகின்றனர்.[1]

விரைவான உண்மைகள் தண்டீஸ்வரர் ஐயனார் திருக்கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

பெயர்க்காரணம்

முன்னொரு காலத்தில் இக்கிராமத்தின் வழியாக செல்லும்போது ஒரு நபரின் கால் இடறி அவர் கொண்டு வந்த பால் கீழே கொட்டிவிட்டது. இதே போன்று பலருக்கும் நடக்கவே, ஊா் மக்கள் ஒன்றுகூடி அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது அந்த இடத்தில் இரத்தம் வழிந்ததாகவும் அங்கு ஐயனார் வடிவத்தில் சிவன் அவதரித்திருப்பதாகவும் கூறப்படுவது தொன்மம். கால் தட்டி விட்டதால், தண்டீஸ்வரா் என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads