தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி (டி.என்.பி.டி.சி) (Tamil Nadu Polytechnic College, Madurai) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின், மதுரையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இது திராவிட பாலிடெக்னிக் என்ற பெயருடன் 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனையடுத்து, இதன் பெயர் தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி என மாற்றப்பட்டது. மாநில அரசால் இக்கல்லூரியில் தொழில்நுட்ப கல்விக்கான தனித் துறை 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, மேலும் இந்தக் கல்லூரியானது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்நிறுவனம் 1979-1980 கல்வியாண்டில் தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்றது. இதுவே தமிழ்நாட்டின் முதல் பலதொழில்நுட்பக் கல்லூரி ஆகும்.
Remove ads
படிப்புகள்
இது நிறுவனத்தால் மொத்தம் 7 பட்டையப் படிப்புகள் வழங்கப்படுகிறது. அவை பின்வருமாறு,
- கட்டிடப் பொறியியல் பட்டயப் படிப்பு
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டையப் படிப்பு
- இயந்திரப் பொறியியல் பட்டையப் படிப்பு
- கணினி பொறியியல் பட்டையப் படிப்பு
- இயந்திரப் பொறியியல் பட்டையப் படிப்பு *
- நெகிழி தொழில்நுட்பத்தில் பட்டையப் படிப்பு *
- பலபடிச் சேர்ம தொழில்நுட்பத்தில் பட்டையப் படிப்பு
- 5,6,7 தொழிலிடைக் கல்வித்திட்டப் படிப்புகள்.
Remove ads
சுழற்சிகள்
கல்லூரியாது இரண்டு சுழற்சிகளில் (ஷிப்டுகள்) பகுதிநேர பாடநெறியை வழங்குகிறது.
- முதல் சுழற்சியில் ஏழு படிப்புகளும் உள்ளன.
- இரண்டாவது சுழற்சியில் 1-4 படிப்புகள் உள்ளன.
- பகுதிநேர படிப்பில் 1-3 படிப்புகள் உள்ளன.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads