தலையாழி ஞான வைரவர் ஆலயம்

From Wikipedia, the free encyclopedia

தலையாழி ஞான வைரவர் ஆலயம்map
Remove ads

தலையாழி கிராமம் வண்ணையம்பதியில் கோவில் கொண்டிருக்கும் அன்னை காமாட்சி ஆலயத்திற்கும் கொக்குவிலுக்கும் இடைப்பட்ட ஒரு கிராமமாகும்.[1]

விரைவான உண்மைகள் தலையாழி ஞான வைரவர் ஆலயம், ஆள்கூறுகள்: ...
Remove ads

தலையாழி ஞான வைரவர் ஆலய பூஜை

இது திருவிழா நடைபெறும் ஆலயமல்ல அலங்காரத்திருவிழா நடைபெறும் ஆலயம் தை மாதம் அலங்கார திருவிழா ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெறும். இதை விட சதுர்த்தி மாத உற்சவம், சோமவாரம், கந்தசட்டி, ஐப்பசி வெள்ளி, நவராத்திரி என வருடத்தில் 91 உற்சவங்கள் நடைபெறுகின்றது. ஒரு நாளைக்கு இரு கால பூஜைகள் (காலை -மாலை ) நடைபெறுகின்றது.

தலையாழி ஞான வைரவர் ஆலய உட்கட்டமைப்பு

உள்நுழைந்ததும் மூலாதார கணபதியும் பலிபீடமும் அமைந்துள்ளது. மூலவர் வைரவர் பெருமான். அடுத்து சாமுண்டீஸ்வரி அம்பாள் கருவறை. அடுத்த மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் அமைந்துள்ளன.

கோவில் உள்வீதியில் பரிவார தெய்வங்களாக விநாயகர்,நந்த கோபாலர்,லக்சுமி,முருகன் தனி தனி சிறு கோவில்களாக அமைந்துள்ளது.

Thumb
மூலவர் வைரவர் பெருமான்

ஆலய வீதியின் அருகில் உள்ள பெரிய அரசமரத்தடியில் பிள்ளையார் ஸ்தாபிக்கப்பட்டு நித்திய நைமித்திய பூஜைகள் யாவும் இப்பிள்ளையாருக்கும் நடைபெறும். உற்சவங்களின் போது பிரதம குருக்களே அபிஷேக ஆராதனைகளை செய்வார்.

இந்த ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை மண்டபத்தோடு கூடிய சிறிய கோபுரம் உண்டு.[2]

Remove ads

தலையாழி ஞான வைரவர் ஆலயவெளிகட்டமைப்பு

கோவிலின் முன்னாள் சனசமூக நிலையமும் கிராம அலுவலகமும் அமைந்துள்ளது. கோவிலின் இடது பக்கமாக வீதியில் அறநெறி பாடசாலை அமைந்துள்ளது. இடது பக்க கோவிலின் பின்பக்கமாக அரச மரத்தடியில் கணபதி கோவில் அமைந்துள்ளது. அதனுடன் இணைந்து விளையாட்டு மைதானமும் அமைந்து காணப்படுகிறது. கோவிலை சூழ ஞான வைரவர் அடியார்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. கோவிலின் வலது பக்கமாக சிறு கிணறும் காணப்படுகிறது.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads