தாலியம்(III) அசிட்டேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாலியம்(III) அசிட்டேட்டு (Thallium(III) acetate) என்பது Tl(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். தாலியத்தின் அசிட்டேட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நுண்ணுயிரியலில் ஒரு தெரிவு செய்யப்பட்ட வளர்ச்சி ஊடகமாக இது நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும்.[1][2] ஆனால் இது முடி உதிர்தல் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. 8 மி.கி/கி.கி அளவு உட்கொள்ளப்பட்டால் இது கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும் பெரியவர்களுக்கு இச்சேர்மம் ஏற்படுத்தும் குறைந்தபட்ச மரண அளவு 12 மி.கி/கி.கி ஆகும்.[3]
Remove ads
தயாரிப்பு
80% அசிட்டிக் அமிலத்தை தாலியம்(III) ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தாலியம்(III) அசிடேட்டைத் தயாரிக்கலாம். மேலும் விளைபொருள் அசிட்டிக் நீரிலியாகப் படிகமாகிறது.[4]
பண்புகள்
நீரற்ற தாலியம்(III) அசிடேட்டு C2/c என்ற இடக்குழுவுடன் a = 15.54 Å b = 8.630 Å and c = 7.848 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் Å உடன் β = 113.92° என்ற பிணைப்புக் கோணத்துடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்பாட்டு அலகுகளும் 2.57 என்ற அடர்த்தியையும் இச்சேர்மம் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாலியம் அயனிக்கும் மூன்று அசிடேட்டு அயனிகள் இடுக்கிணைப்பாக பிணைந்துள்ளன.[5]
தாலியம்(III) அசிடேட்டு ஒற்றைநீரேற்றும் C2/c என்ற இடக்குழுவுடன் a = 9.311 Å, b = 14.341 Å, c = 9.198 Å, β = 119.69 ° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. மேலும் அலகு செல் தொகுதி V = 1067.0 Å3 Z = 4, 2.49. என்ற அடர்த்தியையும் கொண்டுள்ளது.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads