தித்திவங்சா ஏரி
மலேசியா, கோலாலம்பூர், தித்திவங்சா பகுதியில் உள்ள ஓர் ஏரிப் பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
தித்திவங்சா ஏரி அல்லது தித்திவங்சா ஏரிப் பூங்கா (ஆங்கிலம்: Titiwangsa Lake Park; மலாய்: Taman Tasik Titiwangsa); என்பது மலேசியா, கோலாலம்பூர், தித்திவங்சா பகுதியில் உள்ள ஓர் ஏரிப் பூங்கா.
கோலாலம்பூர் மாநகரின் வடகிழக்குப் புறநகரில் ஜாலான் குவாந்தான் சாலையில் அமைந்துள்ள பல முக்கியப் பகுதிகளில் தித்திவங்சாவும் ஒன்றாகும். இங்குதான் தித்திவாங்சா ஏரிப் பூங்காவும் உள்ளது.
1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் கோலாலம்பூரில் இருந்து பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் நகருக்கு இந்தச் சாலையில் தான் செல்வார்கள். அதனால்தான் இந்தச் சாலைக்கு ஜாலான் பகாங் அல்லது ஜாலான் குவாந்தான் என்று பெயர்.
Remove ads
வரலாறு
தித்திவங்சா பகுதியில் ஒரு பெரிய மத்திய ஏரி உள்ளது. அதுதான் இந்த தித்திவங்சா ஏரி. பிரித்தானிய ஆட்சியின் கீழ் இங்கு ஈயச் சுரங்க நடவடிக்கைகள் மிகையாக நடைபெற்றன. பின்னர் அந்த ஈயக் குட்டைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு பெரிய பூங்காவாக மாற்றப்பட்டது.[1]
தித்திவங்சா ஏரிப் பூங்கா 46.13 ஹெக்டேர் அல்லது 114 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.[2] இது கோலாலம்பூர் நகர மையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் உசைன் ஓன் அவர்களால் 1980 பிப்ரவரி 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
Remove ads
பொது
தித்திவங்சா ஏரிப் பூங்காவில் சீர் ஓடல் வழிகள் (Jogging Tracks); மிதிவண்டி வழிகள் (Cycling Tracks), படகோட்ட வசதிகள் (Kayaking), குதிரை சவாரி வசதிகள், மின்னலைக் கட்டுப்பாட்டு கார் பந்தய தடங்கள் (Radio Control Car Racing Tracks) போன்ற வசதிகள் உள்ளன.[3]
தித்திவங்சா காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads