தினேஷ் மோங்கியா

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தினேஷ் மோங்கியா (Dinesh Mongia, பிறப்பு: ஏப்ரல் 17 1977) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்); இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 57 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 – 2006 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

விரைவான உண்மைகள் துடுப்பாட்டத் தகவல்கள், மட்டையாட்ட நடை ...

மேலும் இவர் சண்டிகார் லயன்ஸ் , லங்காஷயர், பஞ்சாப்மாநிலத் துடுப்பாட்ட அணி போன்ற அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.

Remove ads

சர்வதேச போட்டிகள்

2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் மார்ச் 28 இல் , புனேவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 6 பந்துகளில் 2 ஓட்டங்களை எடுத்து ரன் அவுட் ஆனார்.[1] இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் தனது முதல் அரைநூறினைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 75 பந்துகளைச் அந்தித்த இவர் 71 ஓட்டங்களை எடுத்தார். ஆயினும் நூறு ஓட்டங்களை எடுப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டார். இவர் அறிமுகமாகி சுமார் ஓராண்டு கழித்து தான் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் இவர் 147 ஓட்டங்களைச் சந்தித்து 159 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் ஆட்டநாயகன் விருதினை இவர் பெற்றார். மேலும் அந்தத் தொடர் முழுவதும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினையும் வென்றார்.

Remove ads

இருபது 20 போட்டிகள்

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இருபது20 போட்டியில் செப்டம்பர் 22 இல் பெங்களூருவில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சண்டிகார் அணி சார்பில் விளையாடினார். இந்தப் போட்டியில் 6 ஓட்டங்களை எடுத்தார். மேலும் பந்துவீச்சீல் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[2]

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இருபது20 போட்டியில் செப்டம்பர் 23 இல் பெங்களூருவில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சண்டிகார் அணி சார்பில் விளையாடினார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 72* ஓட்டங்களை எடுத்தார். மேலும் பந்துவீச்சீல் 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்கினைக் கைபப்ற்றினார்.[2]

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இருபது20 போட்டியில் செப்டம்பர் 24 இல் ஐதராபாத்தில் நடைபெற்ற வங்காள அணிக்கு எதிரான போட்டியில் சண்டிகார் அணி சார்பில் விளையாடினார். இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களை எடுத்தார். மேலும் பந்துவீச்சீல் 10 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார்.[2]

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இருபது20 போட்டியில் செப்டம்பர் 25 இல் ஐதராபாத்தில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சண்டிகார் அணி சார்பில் விளையாடினார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43* ஓட்டங்களை எடுத்தார். மேலும் பந்துவீச்சீல் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைபப்ற்றினார்.[2]

Remove ads

ஆட்டநாயகன் விருது

மேலதிகத் தகவல்கள் வ எ, எதிரணி ...

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads