திபேரியசு

உரோம பேரரசர் From Wikipedia, the free encyclopedia

திபேரியசு
Remove ads

திபேரியசு (Tiberius, 16 நவம்பர், கிமு 42 – 16 மார்ச், கிபி 37) ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த என்பவர் இரண்டாவது உரோமைப் பேரரசர் ஆவார். இவர் அகஸ்டசின் பின்னர் கிபி 14 முதல் கிபி 37 வரை ஆட்சியில் இருந்தார்.

விரைவான உண்மைகள் திபேரியசு Tiberius, உரோமை இராச்சியத்தின் பேரரசர் ...

திபேரியசு குளோடியசு நீரோ, லிவியா துருசில்லா ஆகியோருக்கு குளோடிய வம்சத்தில் பிறந்தவர் திபேரியசு.[1] இவருக்கு வழங்கப்பட்ட முழுப் பெயர் திபேரியசு குளோடியசு நீரோ என்பதாகும். இவரது தாயார் லிவியா நீரோவுடன் மணமுறிவு பெற்று, ஒக்டேவியனை மணம் புரிந்தார். ஒக்டேவியன் பின்னர் அகஸ்டசு என்ற பெயரில் பேரரசன் ஆனார். இவர் அதிகாரபூர்வமாக திபேரியசிற்கு மாற்றாந்தந்தை ஆனார். திபேரியசு பின்னர் அக்ஸ்டசின் மகள் (ஸ்க்ரிபோனியா மூலம் பிறந்தவர்) யூலியாவை மணம் புரிந்தார். அகசுட்டசு திபேரியசை தத்தெடுத்ததை அடுத்து, திபேரியசு அதிகாரபூர்வமாக யூலியன் எனப் பெயர் கொண்டு திபேரியசு யூலியசு சீசர் (Tiberius Julius Caesar) என்ற பெயரைக் கொண்டார். திபேரியசுக்குப் பின்வந்த பேரரசர்கள் இரு குடும்பங்களின் இந்த கலந்த வம்சத்தை அடுத்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்தார்கள். வரலாற்றாளர்கள் இந்த அரச வம்சத்தை ஜூலியோ குளாடிய மரபு என அழைத்தார்கள். இந்த அரச மரபின் ஏனைய பேரரசர்களுடனான திபேரியசின் உறவு பின்வருமாறு: திபேரியசு - அகஸ்டசின் பெறாமகன். காலிகுலாவின் பெரிய மாமா, குளோடியசின் தந்தை-வழி மாமா, நீரோவின் முப்பாட்டன் மாமா. இருபத்திரண்டரை ஆண்டுகள் திபேரியசு ஆட்சி புரிந்தார்.

திபேரியசு மிகச் சிறந்த உரோமைத் தளபதிகளில் ஒருவர்; பனோனியா, டால்மேசியா, இரேத்சியா மற்றும் (தற்காலிகமாக) செருமானியாவின் சில பகுதிகளை அவர் கைப்பற்றியது வடக்குப் போர்முனைக்கு அடித்தளத்தை அமைத்தது. அப்படியிருந்தும், அவர் ஒருபோதும் பேரரசராக இருக்க விரும்பாத ஒரு இருண்ட, தனிமைப்படுத்தப்பட்ட, மோசமான ஆட்சியாளராக நினைவுகூரப்பட்டார்; மூத்த பிளினி இவரை "மனிதர்களின் இருண்டவர்" என்று அழைத்தார்.[2] கிபி 23 இல் அவரது மகன் துரூசசு ஜூலியஸ் சீசரின் மரணத்திற்குப் பிறகு, திபெரியசு தனிமையாகவும் பற்றின்றியும் மாறினார். கி.பி 26 இல், அவர் தன்னை உரோமில் இருந்து விலக்கி, ஒரோமைப் பேரரசின் நிர்வாகத்தை பெரும்பாலும் தனது நேர்மையற்ற பிரிட்டோரியன் தலைவர்களான செஜானசு, குயின்டசு மேக்ரோ ஆகியோரின் கைகளில் விட்டுவிட்டார்.[3]

திபேரியசு மிசேனும் என்ற இடத்தில் கிபி 37 மார்ச் 16 இல் தனது 77-வது அகவையில் இறந்தார்.[4][5][6] திபேரியசின் கடைசி நாட்களில் அவரது வளர்ப்புப் பேரனும் திபேரியசுக்குப் பின்னர் ஆட்சியேறியவனுமான காலிகுலா அவருடன் தங்கியிருந்தான். காலிகுலா பேரரசருக்கு நஞ்சூட்டியதாக வதந்திகள் கிளம்பின. காலிகுலா திபேரியசை பட்டினியில் இறக்க வைத்ததாகவும், திபேரியசின் தலையணையால் அவரை மூச்சுத்திணற வைத்ததாகவும் பலவாறு கூறப்பட்டதாக சூதோனியசு என்பவர் தனது அறிக்கையில் எழுதியுள்ளார்.[7] காலிகுலா, பேரரசர் குணமடைந்து விடுவாரோ எனப் பயந்து, திபேரியசு உணவு கேட்டபோது அதனை கொடுக்க மறுத்து, அவருக்கு அரவணைப்பு மட்டுமே தேவை என்று வலியுறுத்தினார் எனவும், பின்னர் அவர் படுக்கை துணிகளால் பேரரசரை மூச்சுத்திணற வைத்தார் எனவும் காசியசு டியோ என்ற வரலாற்றாளர் கூறுகிறார்..[8]

திபேரியசு இறந்த பின்னர், அகஸ்டசுக்கு வழங்கப்பட்ட வழமையான மரியாதைகளை உரோமை அரசு வழங்க மறுத்தது; வீதிகளில் கூடிய கும்பல்கள் "திபேரியசை டைபருக்கு அனுப்பு!" என சத்தமிட்டனர். திபேரியசின் உடல் டைபர் ஆற்றில் வீசப்பட்டது.[9] ஆனாலும், பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது எரிசாம்பல் அகஸ்டசின் கல்லறையில் வைக்கப்பட்டது. பின்னர் கிபி 410 இல் உரோமை நகர் சூறையாடப்பட்ட போது, இவரது சாம்பல் எறியப்பட்டது.[10]

தனது உயிலில், திபேரியசு தனது உரிமைகல அனைத்தையும் வளர்ப்புப் பேரன் காலிகுலாவுக்கும், தனது சொந்தப் பேரன் திபேரியசு கெமெலசுக்கும் எழுதி வைத்தார்.[11][12] ஆனாலும், காலிகுலா ஆட்சியேறியவுடன், அந்த உயிலை செல்லுபடியற்றதாக அறிவித்தான்.[12]

Remove ads

குடும்பம்

திபேரியசு இரு தடவைகள் திருமணம் புரிந்தார்:

  • விப்சானியா அக்ரிப்பினா (மார்க்கசு விப்சானியசு அக்ரிப்பாவின் மகள்; கிமு 16–11)
    • மகன்: துரூசசு யூலியசு சீசர் (கிமு 14 – கிபி 23)
  • மூத்த யூலியா (அகஸ்டசின் ஒரே மகள் (கிமு 11–6)
    • குழந்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டது.

மரபு

மேலதிகத் தகவல்கள் முன்னோர்கள்: திபேரியசு ...

இதனையும் காண்க

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads