14
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிபி ஆண்டு 14 (XIV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "பொம்பெயசு மற்றும் அப்புலெயசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Pompeius and Appuleius) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 767" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 14 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினான்காம் ஆண்டாகும்.

Remove ads
நிகழ்வுகள்
இடம் வாரியாக
உரோமப் பேரரசு
- உரோமைப் பேரரசை நிறுவிய அகஸ்ட்டஸ் இறக்கிறான். இவன் கடவுளாக அறிவிக்கப்படுகிறான்.
- அகஸ்டசின் பெறாமகன் திபேரியசு பேரரசன் ஆகிறான்.
- அகஸ்டசின் இறப்பை அடுத்து ரைன் ஆற்றின் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்;[1] செருமானிக்கசு, துரூசசு ஆகியோர் கிளர்ச்சியை அடக்கினர்.
- செருமனியின் படைத்தளபதியாக செருமானிக்கசு நியமிக்கப்பட்டான். இவன் நடத்திய போர் 16 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.[2]
- செருமனியின் ரூர் ஆற்றுக் கரைகளில் வாழ்ந்த மார்சி இனத்துக்கெதிராக செருமானிக்கசு பெரும் தாக்குதலை நடத்தினான். மார்சி இனத்தவர் பலர் கொல்லப்பட்டனர்.[3]
- கணக்கெடுப்பு ஒன்றின் படி, உரோமைப் பேரரசில் 4,973,000 குடிமக்கள் வாழ்ந்தனர்.
ஆசியா
- சீனாவை பஞ்சம் தாக்கியது. சீனர்கள் பலர் தன்னின உயிருண்ணிகளாயினர்.
Remove ads
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads