தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்

தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia

தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்map
Remove ads

தியாகராய நகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில் (ஆங்கிலம்: Sri Venkateswara Swamy Temple, T. Nagar) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியின் வெங்கடநாராயணா சாலையில் அமைந்த வைணவப் பெருமாள் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலில் அலர்மேல் மங்கை தாயார் உடனுறை வெங்கடாஜலபதி காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலில் ஹயக்கிரீவர், வராகர், இராமர், கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், அரங்கநாதர், இலக்குமி, ஸ்ரீ தேவி, பூதேவி, பிரம்மா மற்றும் இராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில், அமைவிடம் ...

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தினர் இக்கோயிலைக் கட்டி, பராமரிக்கின்றனர்.[3] மேலும் இக்கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்பவர்களுக்கான முன்பதிவு சீட்டுகள் வழங்கப்படுவதுடன், திருப்பதி லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads