தியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் நாள் நாட்டுக்காக உயிர் துறந்த இராணுவ வீரர்களின் நினைவாக தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.[1]
Remove ads
வரலாறு
முதன் முதல் போரில் உயிர் நீத்த ஐக்கிய அமீரக இராணுவ வீரர் ஸலெம் சுஹைல் பின் கமிஸ் என்பவர், 1971 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் ஐக்கிய அமீரகம் ஒன்றிணைய சிறிது காலம் முன்பாக ஈரானிய படைகளுடன் க்ரெட்டர் துனுப் என்ற போரில் தனது ஆறு காவல் அதிகாரிகளுடன் ஈரானிய துருப்புகளுக்கு எதிராக போரிட்ட போது, ராஸ் அல் கைமா தேசிய கொடியை கீழிறக்க மறுத்த காரணமாக ஈரானிய துருப்புகளால் கொல்லப்பட்டார்[2]. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் அரசு அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் நாள் தியாகிகளின் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.[3]
Remove ads
தியாகிகள் கால அட்டவணைப்படி
1990–1991 ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற குவைத் நாட்டு விடுதலைக்கான முதல் வளைகுடாபோரில் இறந்த இராணுவ வீரர்கள் நினைவாகவும், 1977 ஆம் ஆண்டு அரசு அமைச்சர் ஸாஇஃப் குப்பாஸ் படுகொலை நினைவாகவும், 1984 ஆம் ஆண்டு அமிராக தூதர் கலிஃபா அல் முபாரக் படு கொலை நினைவாகவும், மற்றும் பணி நேரத்தில் நாட்டிற்காக உயிர் துறந்த வீரர்கள் நினைவாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[4]
யெமெனில் " நம்பிக்கை மீட்கப்படும் நடவடிக்கை"
வளைகுடா நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏடன் அரசை ஆதரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட "நம்பிக்கை மீட்கப்படும் நடவடிக்கை"யில் சவூதி அரேபியா தலைமையில் இயங்கிய அரபுக் கூட்டணியில் ஐக்கிய அமீரக படையும் இணைந்தது. இப்போரில் யேமனில் 45 ஐக்கிய அமீரக போர்வீரர்கள் மரணமடைந்தனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் நாள் முதல் மூன்று நாட்கள் அரசு துக்க நாளாக அறிவித்து, தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.[5]
Remove ads
கடைபிடித்தல்
ஞாபகார்த்த மற்றும் தேசிய நிகழ்வுகளாக நவம்பர் 30ம் நாள், அனைத்துக் கல்வி, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காவும் உயிர் துறந்த வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தின் மதிப்பினை போற்றும் வகையில் நாடுமுழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.[6]
தியாகிகளுக்கான அஞ்சலி
- இறந்த ஐக்கிய அமீரக வீர்ர்களுக்கான அஞ்சலி 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தபடும்.[4]
- சார்ஜா மாநிலத்தின் ஆட்சியாளர் ஷெக் சுல்த்தான் பின் முஹம்மது அல் ஃகாஸிமின் ஆணைப்படி தியாகிகளைக் கவுரவப்படுத்தும் விதமாக தியாகளுக்கான நினைவுச்சின்னம் சாரஜா மலிஹா சாலையில் சார்ஜா விண்வெளி மற்றும் வானியல் மையம் அருகில் நிறுவவும், சார்ஜா பல்கலை கழகத்தில் உள்ள சாலை ஒன்றுக்கு தியாகிகள் சாலை என்று பெயரிடும் பணியை சார்ஜா அரசு துவங்கிவுள்ளது.[7][4]
- தியாகிகள் சதுக்கம் மற்றும் நினைவுச்சின்னம் ஒன்றினை அஜ்மான்அரசு அஜ்மானிலுள்ள அல்ஆலம் பூங்காவில் அமைக்கவுள்ளது.
- தியாகிகளின் நினைவாக ஃபுஜைராஹ் மற்றும் ராஸ் அல் கைமா இணைக்கும் சாலைக்கு ஸுஹதா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.[8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads