திரக்சாரமம்

From Wikipedia, the free encyclopedia

திரக்சாரமம்map
Remove ads

திரக்சாரமம் (Draksharama) என்பது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்பணிக்கப்பட்ட புனிதமான ஐந்து பஞ்சராம சேத்த்திரங்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி நகரத்தில் அமைந்துள்ளது. பீமேசுவர சுவாமி என்பது இந்த கோவிலில் சிவபெருமானைக் குறிக்கிறது.

விரைவான உண்மைகள் பீமேசுவர சுவாமி கோயில், அமைவிடம் ...
Remove ads

கோயிலின் வரலாறு

கோயிலிலுள்ள கல்வெட்டுகள் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கீழை சாளுக்கிய மன்னர் பீமனால் கட்டப்பட்டவை என்பதை வெளிப்படுத்துகின்றன. கட்டடக்கலை மற்றும் சிற்ப ரீதியாக, இந்த கோயில் சாளுக்கியர் மற்றும் சோழர் பாணிகளின் கலவையை பிரதிபலிக்கிறது.[1]

புராணம்

இந்த இடம் தக்கன் யாகம் செய்த இடமாகக் கருதப்படுகிறது. சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்திய தக்கனை தண்டிக்க சிவனது நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்திரர் தோன்றி தக்சனை தண்டித்த இடமென்றும் புராணங்கள் கூறுகிறது. இந்த கதையின் காரணமாக, இந்த இடம் தெற்கின் தட்சிண காசி வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது.

அடைவது எப்படி

இந்த இடம் அமலபுரத்திலிருந்து 25 கி.மீ தூரத்திலும், காக்கிநாடாவிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், ராஜமன்றியிலிருந்து 50 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ராஜமன்றி மற்றும் காக்கிநாடாவிலிருந்து தொடருந்தில் பயணம் செய்து அங்கிருந்து சாலை வழியாக இந்த ஊரை அடையலாம். மாநில நெடுஞ்சாலை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுடன் இணைக்கிறது. அடிக்கடி பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. ராஜமன்றி வானூர்தி நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads