திரு இதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரு இதயப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் (Sacred Heart Girls Higher Secondary School) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியின் நிர்வாகம் பிரான்சிசுகன் மேரி சேவை அமைப்பின் கீழ் உள்ளது. இந்த நிறுவனத்தில் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த நிறுவனம் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டுமே இருபாலர் கல்வியினைக் கற்பிப்பை வழங்குகிறது. உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியவை மகளிருக்கானவை. தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.[1]
தமிழ்நாடு மாநிலக் கல்வித் திட்ட விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திரு இருதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ள பிரான்சிசுகன் மேரி சேவையமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு சிறுபான்மை நிறுவனமாகும். சாதி, மதம், வேறுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் ஏழைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள், சமூக ரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்விச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டு 1937-ஆம் ஆண்டில் இந்த பள்ளி நிறுவப்பட்டது.
'சத்தியத்திற்கும் அறக்கட்டளைக்கும் தலைவணங்குகிறது' என்பது பள்ளியின் குறிக்கோள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads