திருநாவற்குளம்

From Wikipedia, the free encyclopedia

திருநாவற்குளம்
Remove ads

திருநாவற்குளம் (Thirunavatkulam) இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வவுனியா பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.[1]

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள்

2015 ஆம் ஆண்டுத் தரவுப்படி ஆண்கள் 989 பேரும் பெண்கள் 1021 பேருமாகவும் சிறுவர்கள் 590 பேருமாக 569 குடும்பங்கள் உள்ளன. 37 பேர் விசேட தேவைகளுக்கு உட்பட்டவர்களும் உள்ளனர். இக் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். இதைவிட அரசுப் பணியில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இக்கிராமத்தில் வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் இருந்தாலும் இக்கிராமத்தில் இவ்வசதிகள் இல்லை ஏனைய கிராமங்களிலேயே இவர்கள் சென்று வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். இக்கிராமத்தில் 2 பேர் போரால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

Remove ads

பொது வசதிகள்

இக்கிராமத்தில் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் உள்ள கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோக அலுவலரும், சமுர்த்தி அலுவலரும் பணியாற்றுகின்றனர். இதைவிட பொதுநோக்கு மண்டபமும் அதில் கிராம அபிவிருத்திச் சங்கமும், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கமும், குடும்ப நல உத்தியோகத்திரும் பயிற்சி மண்டபமும் வாசகசாலையும் உள்ளது. அதே வளாகத்தில் உமாமகேஸ்வரன் முன்பள்ளியும் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ளவர் அருகில் உள்ள தாண்டிக்குளம் பிரிமண்டு பாடசலையிலும் ஏனைய நகர்ப் பாடசலைகளிலும் கல்வி கற்கின்றனர். இவ்வூரில் பாடசாலைகள் இல்லை. இவ்வூரில் சிற்பத் தொழிற்சாலையும் நொறுக்குத்தீனிச் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பெரும்பாலானவர்களிடம் மலசலகூடம் உள்ளது. இக்கிராமத்தில் மழைக்காலத்தில் நீர் வடிந்தோடாமையே பெரும் பிரச்சினையாக உள்ளது.[2]

Remove ads

கோவில்கள்

  • நாகதம்பிரான் கோவில்[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads